ரயிலுக்காக 30 ஏக்கரை ரூ. 30 ஆயிரத்துக்கு கொடுத்த பெண்மணி !

0
குஜராத்தில் புல்லட் ரயில் திட்டத்திற் காக தனது மூதாதை யரின் குடும்பச் சொத்தை மிகவும் 


சொற்பத் தொகைக்கு கொடுக்க முன் வந்துள்ளார் ஜெர்மன் வாழ் இந்தியப் பெண்மணி ஒருவர்.

இது குறித்து பிடிஐயிடம் தெரிவித்துள்ள தேசிய உயர்வேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் உயரதிகாரி ஒருவர், 

‘‘புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலம் கையப் படுத்தும் திட்டத்தில் பெறும் முதல் நிலம் இதுவே’’ என்று தெரிவித்தார்.

உயர்வேக ரயில் கார்ப்பரேஷ னின் உயரதிகாரி மேலும் தெரிவித்துள்ள தாவது:

''சவீதா பென், ஜெர்மனியில் இந்தியன் ரெஸ்டாரெண்ட் ஒன்றை நடத்தி வருபவர். 

குஜராத்தில் வதோதரா மாவட்டத்தின் பட்ரா தாலுக்காவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர், 

33 ஆண்டு களுக்கு முன்பே ஜெர்மனி யில் குடியேறிய இவர் அங்கு சென்ற பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

குஜராத்தில் புல்லட் ரயில் வருவது கேள்விப்பட்ட சவீதா பென் மிகவும் மகிழ்ச்சி யடைந்துள்ளார்.


ஆனால் அதற்கான முயற்சிகளில் சில சுணக்கங்கள் உள்ளன என்பதை அறிந்தவர் தனது பூர்வீக நிலத்தை வழங்குவதாக உறுதி யளித்தார்.

அதன் படியே, 11.94 ஹெக்டேர் நிலத்தை ரூ.30.094க்கு புல்லட் ரயில் காரிடார் பாதைக்கு வழங்கி யுள்ளார். 

ஒரு ஹெக்டேர் நிலம் 2.47 ஏக்கர் நிலத்திற்கு சமம். அப்படி யென்றால் ஏறத்தாழ 29.4918 ஏக்கர் நிலம்.

குஜராத்திற்கு புல்லட் ரயில் வர வேண்டும் என்பதற் காகவே இவ்வளவு ஆர்வத்தோடு இவர் இறங்கி வந்துள்ளார். 

இவ்வளவு குறைந்த விலைக்கு நிலத்தை அளிக்க ஒப்புக் கொண்டதற் காக அந்த பெண்மணிக்கு நாங்கள் மிகவும் நன்றி யுள்ளவர்களாக இருக்கிறோம்.

மாநிலத்தில் இந்த திட்டம் தொடங்கு வதற்காக நாங்கள் வாங்கிய முதலாவது பகுதி நிலம் இது தான்.''

இவ்வாறு இந்திய உயர்வேக ரயில் கார்ப்பரேஷன் உயரதிகாரி தெரிவித்தார்.

பிரதான சாலைப் பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமெனில் 5 கோடி பத்து கோடி இன்றைய மதிப்பு. 

1 ஏக்கருக்கு அவ்வளவு மதிப்பு. இப்பெண்மணி கிட்டத்தட்ட தனது 30 ஏக்கர் நிலத்தை புல்லட் ரயில் திட்டத்திற்கு தானாக முன்வந்து கொடுத்துள்ளார்.

1,400 ஹெக்டேர் நிலம் தேவை

புல்லட் ரயில் செல்வதற் காக திட்டமிடப்பட்டுள்ள 508 கிலோ மீட்டர் காரிடார் பாதைக்கு குஜராத் 

மற்றும் மகாராஷ்டிரா இரு மாநிலங் களிலும் 1,400 ஹெக்டேர் நிலங்கள் தேவைப் படுகின்றன. 

இதில் 1,120 ஹெக்டேர் நிலங்கள் தனியாரிடம் உள்ளன. கிட்டத்தட்ட 6000 நிலச் சொந்தக் காரர்களுக்கு ஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.


தற்போது, தேசிய உயர்வேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மும்பையில், இதுவரை 0.09 சதவீத நிலத்தை மட்டுமே கையகப் படுத்தி யுள்ளது. 

இத்திட்டத்திற் காக நில கையகப் படுத்துதல் பிரச்சினைகள் தொடர்பாக இரு மாநிலங் களிலும் எதிர்ப்புகள் கிளம்பி யுள்ளன.

விவசாயிகள் தங்கள் நிலத்தை விட்டுக் கொடுக்க அவர்களை சமாதானப் படுத்தும் 

முகாம்கள் தற்போது நிலம் தேவைப்படும் மாவட்டங் களில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings