கஜா புயல் பாதிப்புகளை சீர மைக்க மாநில பேரிடர் நிவாரண நிதியில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.353.70 கோடியை
மத்திய உள்துறை முன்கூட்டியே இடைக்கால நிவாரணமாக விடு வித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் வீசிய கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக் கோட்டை, திருச்சி ஆகிய
டெல்டா மாவட்டங்கள் உட்பட 12 மாவட் டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித் தன.
ஒரு லட்சத்துக்கும் அதிக மான வீடுகள் பகுதியாகவும் முழுமை யாகவும் சேதமடைந்தன.
88 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக் டேர் நிலங்களில் பயிரிடப் பட்டிருந்த தென்னை, மா, பலா, முந்திரி உள்ளிட்ட பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்தன.
ஒரு லட்சத்து 4 ஆயிரத்து க்கும் அதிகமான மின்கம்பங்கள் முறிந்ததால் இந்த மாவட்டங் களில் பல கிராமங்களில் மின் வினியோகம் அடியோடு பாதிக்கப் பட்டது.
தற்போது, புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவா ரணம் மற்றும் மறு சீரமைப்பு பணி கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதற்கிடையில், கடந்த நவ.20-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங் களில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
அன்றே, முதல் கட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.1000 கோடியை ஒதுக்கி ஆணை யிட்டார்.
தொடர்ந்து, நவ.22-ம் தேதி டெல்லி சென்ற முதல்வர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினார்.
அத்துடன், தற்காலிக நிவாரணம் மற்றும் சீரமைப்புக்கு ரூ. 1, 431 கோடியும் நிரந்தர சீரமைப்பு களுக்கு ரூ.14,910 கோடியும் வழங்க வேண்டும்
என்றும் மத்திய குழுவை அனுப்பி சேதங்களை மதிப்பிட வேண் டும் என்றும் கோரிக்கை விடுத் தார்.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில்
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து, முதல்வர்
டெல்லியில் இருந்து சென்னை திரும்பும் முன்பே மத்திய அரசு அறிவிப்பு வெளி யிட்டது.
அந்தக் குழுவினர், கடந்த 23-ம் தேதி சென்னை வந்தனர். நவம்பர் 24-ம் தேதி முதல்வரை சந்தித்தனர்.
பின்னர், அன்றே புதுக்கோட்டை சென்று பார்வையிட்டனர். மறுநாள் 25-ம் தேதி தஞ்சை,
திருவாரூர் மாவட்டங் களையும் 26-ம் தேதி நாகை, காரைக்காலி லும் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து 27-ம் தேதி சென்னை வந்த அவர்கள் மீண்டும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் டெல்லி சென்றனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி ரயில் மார்க்கமாக நாகை சென்றார்.
அன்றைய தினம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை யிட்டார்.
நிவாரண முகாம்களில் தங்கி யிருந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பைகளையும் அவர்களுக்கு வழங் கினார்.
அப்போது, ‘‘வீடுகளை இழந்தவர் களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்’’ என்று அறிவித்தார்.
இந்நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு இந்த ஆண்டுக் கான (2018-19) இரண்டாம் கட்ட
மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.353.70 கோடியை மத்திய உள் துறை விடுவித்துள்ளது.
அத்துடன், இந்த தொகை இடைக்கால நிவா ரணமாக வழங்கப் பட்டுள்ளதாக வும் மத்திய குழுவினரின்
இறுதி அறிக்கை கிடைத்த பின், அடுத்த கட்ட நிவாரண தொகை அளிக்கப் படும் எனறும் தெரிவித் துள்ளது.
மேலும், மாநில அரசின் முன்னெச் சரிக்கை நடவடிக்கை களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை,
இந்திய விமானப்படை, கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள், கடற்படை, கடலோர
காவல்படை வீரர்கள் தேவையான மீட்பு உபகரணங் களுடன் உதவியாக இருந்தனர்.
இந்த வகையில் மத்திய அரசு முழு அளவில் உதவி யுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை விரைவில் சீரடைந்து வருவதாகவும் உள் துறை தெரிவித் துள்ளது.
தமிழகத்துக்கு கிடைத்துள்ள நிதி தொடர்பாக தமிழக வரு வாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபாலிடம் கேட்ட போது,
‘‘மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ஏற்கெனவே முதல்கட்டமாக வழங் கப்பட்ட ரூ.393 கோடியைச் சேர்த்து தமிழக அரசிடம் ரூ.707 கோடி உள்ளது.
அத்துடன் தற்போது 2-ம் கட்டமாக மத்திய உள்துறை முன்கூட்டியே விடுவித்துள்ள நிதி யான ரூ.353 கோடியே 70 லட்சமும் சேர்ந்துள்ளது.
இந்த 2-ம் கட்ட நிதியை தற்போது இடைக்கால நிவாரணமாகத் தான் வழங்கி யுள்ளனர்.
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படை யில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி அளிப்பார்கள்’’ என்றார்.
Thanks for Your Comments