திருச்சி திருவெறும்பூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகையை கொள்ளை யடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அடுத்த காட்டூரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், மத்திய அரசின் கீழ் இயங்கும் பெல் தொழிற் சாலையில் பொது மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இவர் வீட்டை பூட்டி விட்டு பொருட்கள் வாங்குவ தற்காக குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட கொள்ளை யர்கள் வீட்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று
பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 40 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகிய வற்றை திருடிச் சென்றனர்.
இது குறித்து அளிக்கப் பட்டுள்ள புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks for Your Comments