திருப்பதி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே தீனி கிராமத்தை சேர்ந்த கங்காதரம் குவைத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று இரவு சென்னை விமான நிலையம் வழியாக நாடு திரும்பினார்.
அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல கங்காதரத்தின் மனைவி விஜயம்மா, சகோதரர் பிரசன்னா,
அவரது மனைவி மாரியம்மா, பிரசன்னாவின் ஒன்றரை வயது மகன் ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்றனர்.
கங்காதரம் நாடு திரும்பிய நிலையில் மகிழ்ச்சியுடன் வரவேற்ற குடும்ப உறுப்பினர்கள் காரில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டி ருந்தனர்.
ரேணிகுண்டா அருகே இருக்கும் மாமண்டூர் நெடுஞ்சாலை பகுதியில் அவர்களது காரும்,
எதிர் திசையில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அதில் இருந்த 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த ரேணிகுண்டா காவல் துறையினர் விரைந்து சென்று உயிரிழந்த வர்களின் உடல்களை கைப்பற்றி,
உடற்கூறு ஆய்வுக்காக திருப்பதி யில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் சுமார் 2 மணி நேரம் அங்கு போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் ரேணிகுண்டா போக்குவரத்து காவல் துறையினர் நெரிசலை சீர் செய்தனர்.
Thanks for Your Comments