மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத்
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 தொடங்கி எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
5 மாநிலங் களின் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெற வுள்ள மக்களவைத்
தேர்தலுக்கு முன்னோட்ட மாக என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள தால்,
இந்த தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் மிகுந்த ஆவலுடன் எதிர் பார்க்கப் படுகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களில் பாஜக ஆட்சியில் உள்ளது.
மிஸோரம் மாநிலத்தில் காங்கிரஸும், தெலங்கானா வில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் ஆட்சியில் இருந்து வருகின்றன.
5 மாநிலங் களில் சேர்த்து 679 தொகுதி களில் மொத்தம் 8,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 724 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்பட் டுள்ளன.
இந்நிலை யில், இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந் ததை அடுத்து பொது மக்கள் வாக்குகள்
ஒவ்வொரு சுற்றாக எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக் கப்பட்டு வருகிறன.
மத்திய பிரதேசம் (230)
காங்கிரஸ் - 108
பாஜக - 93
பிஎஸ்பி - 5
மற்றவை - 6
ராஜஸ்தான் (200)
காங்கிரஸ் - 100
பாஜக - 66
பிஎஸ்பி - 3
மற்றவை - 15
தெலங்கானா (119)
டிஆர்எஸ் - 89
காங்கிரஸ் - 27
பாஜக - 5
மற்றவை - 6
தெலங்கானா மாநிலத்தில் ஆளும் சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கிறது.
சத்தீஸ்கர் (90)
காங்கிரஸ் - 55
பாஜக - 20
பிஎஸ்பி + - 5
மற்றவை - 3
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ராமன் சிங் பின்னடைவில் இருந்து வருகிறார்.
மிசோரம் (40)
எம்என்எஃப் - 22
காங்கிரஸ் - 9
பாஜக - 1
மற்றவை - 5",
Thanks for Your Comments