65 வயதில் பள்ளிக்கு செல்லும் முதியவரின் நெகிழ்ச்சி வார்த்தைகள் !

0
இந்தியா வின் உத்தர பிரதேச மாநிலத்தில் 65 வயது முதியவர் ஒருவர், தினமும் சிறுவனைப் போல பள்ளி சென்று வருகிறார்.


அமேத்தி தத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நான்ஹி லால்(65). மாந்தோப்பு காவலாளி யாக 

வேலை பார்த்து வந்த இவருக்கு, ஒருநாள் பள்ளி சென்று படிக்கும் ஆர்வம் ஏற்பட் டுள்ளது.

இதனால் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு பள்ளியில் சேர முடிவெடுத்தார்.

தனது சிறுவயதில் வறுமையின் காரணம் மட்டும் இன்றி, அப்போது பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் 

காட்டுப் பூனையின் தாக்கு தலு க்கு ஆளானதையும் பார்த்து ஏற்பட்ட பயத்தால் நான்ஹி பள்ளிக்கு செல்லவில்லை.

இதன் காரணமாக அவருக்கு படிப்பறிவு கிடைக்காமல் போனது. 

அதன் பின்னர் தான் மாந்தோப்பில் காவலாளி யாக சேர்ந்துள்ளார். இவருக்கு தினசரி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.


இந்நிலை யில், நான்ஹி மாந்தோப்பில் இருந்த போது சிறுவர்கள் சீருடை அணிந்து மகிழ்ச்சி யுடன் பள்ளிக்கு செல்வதை பார்த்துள்ளார்.

இதனால் தானும் பள்ளியில் சேர முடிவெடுத்த நான்ஹிக்கு, தனது பொழுதை கழிப்பதற்கும் இதுவே சிறந்த வழியாகவும் தோன்றி யுள்ளது.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் சேர விண்ணப் பித்துள்ளார் நான்ஹி லால். 

ஆனால் ஓரளவுக்கு கூட எழுத, படிக்க தெரியாத வராக அவர் இருந்ததால், 

6 -ஆம் வகுப்பில் இருந்து தொடங்கும் அந்த பள்ளியில் அனுமதி கிடைக்க வில்லை.

எனவே, எழுத்துப் பயிற்சி முகாமில் சேர்ந்த நான்ஹி லால் எழுதுவதில் கற்றுத் தேர்ந்தார். 

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தன்னம் பிக்கையுடன் பள்ளியில் சேர விண்ணப் பித்தார்.

இம்முறை அவருக்கு பள்ளியில் இடம் கிடைத்தது. ஆனால், வயதானவர் என்பதால் நிபந்தனை யுடன் அவர் சேர்க்கப் பட்டார். 

அதாவது வருகை பதிவேட்டில் அவரது பெயர் சேர்க்கப் படாது, எனினும் வகுப்பில் கலந்து கொண்டு சக மாணவர் களுடன் படிக்கலாம்.

மூன்று ஆண்டு களுக்கு முன்பு 6ஆம் வகுப்பில் சேர்ந்த நான்ஹி லால், தற்போது 8 -ஆம் வகுப்பு படிக்கிறார். 


இது குறித்து அவர் கூறுகையில்,

‘குழந்தை களுடன் ஒரே வகுப்பில் அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சியடைகிறேன். 

தேர்வுகள் மற்றும் பள்ளி ஆண்டு விழாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கிறேன்.

வாழ்க்கை இப்போது மிகவும் அழகாக இருக்கிறது. இந்த குழந்தைகள் என்னை பாசத்துடன் தாத்தா ஜி என்று அழைக்கி றார்கள். 

கற்றுக் கொள்வதற்கு என்றும் முடிவு இல்லை. புத்தக் அறிவைப் பெறுவதற்கு இதுவே எனக்கு சரியான நேரமாக இருக்கலாம். 

எனது சகோதரி யுடன் நான் வீட்டில் தங்கி யிருக்கிறேன். இந்த வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக அனுபவிக் கிறேன்’ என தெரிவித் துள்ளார்.


நான்ஹி லாலின் ஆசிரியர் கூறுகை யில், எந்தவொரு மோசமான கால சூழ்நிலை களிலும் இவர் பள்ளி வகுப்பை தவறவிடுவ தில்லை. 

மற்ற மாணவர் களுடன் ஒப்பிடும் போது படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், நாங்கள் அவருக்கு உதவுவோம் என தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings