பரோட்டா விலையால் ஏற்பட்ட தகராறில் அடிதடியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் நேற்று முன்தினம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் வந்த வாகனத்தில் பலர் திரும்பிச் சென்றனர்.
இந்நிலை யில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை அருகே உள்ள சிலந்திப் பேட்டையைச் சேர்ந்த
சிலர் போராட்டத்தில் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் இரவு ஊருக்கு திரும்பினர்.
அப்போது குரோம் பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உணவு அருந்தச் சென்றனர்.
ஹோட்டலில் பரோட்டா விலையை கேட்டபோது ஊழியர் அளித்த பதிலில் சாப்பிட வந்தவர்கள் அதிர்ந்தனர்.
எங்கள் ஊரில் ஒரு பரோட்டா ரூ. 5 இங்கு ரூ. 30 என்பதால் ஹோட்டலுக்கு வந்தவர்கள் சாப்பிடாமல் வெளியேறினர்.
இதனால் இருதரப்பினரு க்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஹோட்டலை அடித்து நொறுக்கி சூறை யாடினர்.
இதை யடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர் குரோம் பேட்டை போலீஸில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் அடிதடியில் ஈடுபட்டதாக சிலந்திப் பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுவன்
மற்றும் சிவகாசி, சதீஷ், வீரராகவன், பேரறிவாளன், பாலசந்திரன், முத்துக்குமார்
ஆகியோரை போலீஸார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
பின்னர் சிறுவனை செங்கல்பட்டு சீர்த்திருத்தப் பள்ளியிலும் மற்ற 6 பேரையும் சைதப்பேட்டை கிளை சிறையி லும் அடைத்தனர்.
Thanks for Your Comments