உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் ஆலம்பாக் பகுதியை சேர்ந்தவர் சலீல் சவுத்ரி.
ரெயில்வே யில் டிக்கெட் பரிசோதக ராக பணியாற்றிய இவருக்கு ரெயில்வே நிர்வாகம் வீடு ஒதுக்கி தந்துள்ளது.
இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது பற்றி போலீசில் அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து சவுத்ரியின் பூட்டிய வீட்டிற்குள் சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
அங்கு அவரது 80 வயது தாயார் உயிரிழந்து கிடந்துள்ளார். அவர் பசியால் மரணம் அடைந்து இருக்க கூடும் என போலீசார் கூறினர்.
இந்த சம்பவத்திற்கு பின் சவுத்ரியை காண வில்லை.
அவர் பணிக்கு வராமல் இருந்ததற் காக 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த 2 மாதங்களாக அவர் பணியில் இல்லை என விசாரணை யில் தெரிய வந்துள்ளது.
Thanks for Your Comments