ரஷ்யாவில் சுரங்கம் ஒன்றில் பற்றிய நெருப்பில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அந்நாட்டில் சாலிகாமஸ் என்ற நகரில், உரல்களி என்ற நிறுவனம் சுரங்கம் (( Solikamsk, Uralkali )) அமைந்துள்ளது.
அதன் ஒரு பகுதியில் பூமிக்கு கீழே கட்டுமானப் பணிகள் நடந்து வந்துள்ளன. இந்நிலையில், அங்கு திடீரென தீப்பற்றியது.
இதில் அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் 360 மீட்டர் ஆழத்தில் மீட்கப்பட்டன.
விபத்து குறித்து போலீசார், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப் பட்டனவா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து இதுவரை கண்டு பிடிக்கப்பட வில்லை.
ரஷ்யாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு இதேபோல சுரங்கம் ஒன்றில் நேரிட்ட விபத்தில் 36 பேர் பலியானது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments