மக்களின் உடலில் Bio Chip பொருத்தும் ஸ்வீடன் !

0
ஸ்வீடன் நாட்டில் உள்ள மக்களில் 3,500 பேர் தங்களது உடலில் Bio Chip பொருத்திக் கொண் டுள்ளனர்.


Bio Chip என்பது Sim card போன்று இருக்கும் மிகச் சிறிய எலக்ட்ரானிக் பொருள் ஆகும். 

இதனை உடலின் எந்த பகுதியிலும் பொருத்திக் கொள்ளலாம்.

இதில் நமக்கு நம்முடைய தகவல் களை சேகரித்து வைத்துக் கொள்ளலாம். 

அதே போல் டிக்கெட், கடவுச்சீட்டு போன்ற விடயங் களுக்கும் இதனை பயன்படுத்த முடியும்.
இந்நிலையில் ஸ்வீடன் நாட்டில் செயல்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, தங்கள் பணி யாளர்கள் 

எல்லோரும் கைகளில் Bio Chip பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. 

அதனை ஏற்றுக் கொண்ட பணி யாளர்கள் தாமாக முன் வந்து தங்களது கைகளில் Bio Chip -யை பொருத்திக் கொண்டனர்.

இதற்காக மருத்துவ மனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. 

அங்கு பணி யாளர்களின் கைகளில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மருத்துவர்கள் Bio Chip-யை பொருத்தினர்.
இதனை எப்போது வேண்டு மானாலும் உடலில் இருந்து நீக்கிக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்த Bio Chip-யில் தனிநபர் ஒருவரின் அனைத்து விதமான தகவல் களும் அடங்கி யிருக்கும்.


இதனை ஸ்வீடன் நாட்டில் எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியும். 

தற்போது ஸ்வீடனில் 3,500 பேர் இந்த Bio Chip-யை உடலில் பொருத்திக் கொண்டிருப்ப தனால், 

உலகிலேயே அதிகமான மக்கள் இதனை பொருத்திக் கொண்ட நாடு ஸ்வீடனாக உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings