பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாடாளு மன்றம் நோக்கி
ஒரு லட்சம் விவசாயிகள் நேற்று பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத் தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட
பல்வேறு எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசினர்.
207 விவசாய சங்கங்கள்
பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.
நாடாளு மன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டி விவசாயிகள் பிரச்சினை களை விவா திக்க வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி 207 விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லியில் நேற்று முன்தினம் இரண்டு நாள் போராட்ட த்தைத் தொடங்கின.
இதில் பங்கேற்க உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரி யாணா, மேற்கு வங்கம், பிஹார்,
மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தமிழகம் உட்பட 24 மாநிலங் களைச் சேர்ந்த ஒரு லட்சம் விவசாயிகள் வரை நேற்று முன்தினம் டெல்லி யில் குவிந்தனர்.
அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் ஒருங் கிணைப்புக் குழு போராட்டத்தை முன்னின்று நடத்தியது.
தமிழகத்தில் இருந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக் கண்ணு
தலை மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் முகா மிட்டனர்.
எதிர்க் கட்சித் தலைவர்கள்
போராட்டத்தின் 2-வது நாளான நேற்று காலை டெல்லியின் 5 முக்கிய இடங்களில் இருந்து
விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு மதியம் 12 மணி அளவில் ராம் லீலா மைதானத்தை சென்றடைந் தனர்.
பின்னர் அங்கிருந்து ஜந்தர் மந்தருக்கு பேரணியாகச் சென் றனர்.
பிற்பகலில் ஜந்தர் மந்தரில் நடந்த ஆர்ப்பாட்ட த்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா,
லோக்தந்ரிக் ஜனதா தள நிறுவனர் சரத் யாதவ், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
மற்றும் பல்வேறு எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
பிரதமருக்கு ராகுல் கண்டனம்
இதில் ராகுல் காந்தி பேசிய தாவது: குறிப்பிட்ட 15 தொழிலதிபர் களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத் துக்காக ஒரு தனியார் நிறுவனத் துக்கு மத்திய அரசு ரூ.30,000 கோடியை வழங்குகிறது.
இதையெல் லாம் செய்யும் மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை மட்டும் ரத்து செய்யாதது ஏன்,
வேளாண் விளை பொருட்களுக் கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்த்தப் படும்,
விவசாயி களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித் திருந்தார்.
ஆனால் அவரது வாக்குறுதி காற்றில் பறக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு பிரச்சினைகள் மட்டுமே எதிரொலி க்கும்.
ஒன்று விவசாயி களின் எதிர்காலம். மற் றொன்று இளைஞர்களின் வேலை வாய்ப்பு.
விவசாயிகளின் நலனுக்காக எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரண் டுள்ளன. விவசாயிகளை புறக்கணித் தால் பாஜக ஆட்சியை அவர்கள் அகற்றுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பின்னர் ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென் றனர்.
நாடாளுமன்ற சாலை போலீஸ் நிலையம் முன்பு வந்த போது அவர் களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் ஆடைகளைக் களைந்து சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத னால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சக்கணக்கில் விவசாயிகள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் டெல்லி மாநகரத்தில் நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இத னால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப் பட்டனர்.
விவசாயிகளை உபசரித்த மக்கள்
இரண்டு நாள் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒரு லட்சம் விவசாயிகள் வரை நேற்று முன்தினம் டெல்லியில் குவிந்தனர்.
அன்றிரவு அவர்கள் ராம்லீலா மைதானத்தில் தங்கினர்.
டெல்லிவாழ் மக்கள் தாமாக முன்வந்து விவசாயி களுக்கு டீ, காபி மற்றும் உணவு பண்டங்களை வழங்கினர்.
கடும் குளிர் காரணமாக விவசாயி களால் தூங்க முடிய வில்லை. அவர்களுக்கு டெல்லி மக்கள் போர்வை, கம்பளி கொடுத்து உதவினர்.
டெல்லி மற்றும் அண்டை மாநிலமான ஹரியாணா வின் ரோட்டக், பஞ்சாபின் சண்டிகர் மற்றும்
உத்தர பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள்
தன்னார்வ அடிப்படையில் டெல்லி வந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மேல் சிகிச்சை தேவைப் பட்டவர்கள் மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறிய போது, "ஒட்டு மொத்த இந்தியாவு க்கும் விவசாயிகள் உணவு வழங்குகின்றனர்.
அவர்களுக்கு மருத்துவ சேவை யாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்தார்.
Thanks for Your Comments