செல்போன் திருடிய வழக்கில் திருமணத்தன்று மணக்கோலத்தில் இருந்த இளைஞரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
மணகனுடன் இணைந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட அவரின் நண்பர், போலீஸைப் பார்த்ததும் மண்டபத்தில் இருந்து தலை மறைவானார்.
மும்பையின் செம்பூர் பகுதியில் உள்ள அமர் மஹால் பிரிவு அருகே கடந்த திங்கள் கிழமை ஒரு பெண் தனது, மகளுடன் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, பைக்கில் வேகமாக வந்த இரு இளைஞர்கள், அந்த பெண்ணின் கையில் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.
அந்த செல்போனின் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படு கிறது.
இதை யடுத்து, செல்போனை பறி கொடுத்த பெண் திலக் நகர் போலீஸில் புகார் அளித்தார்.
அந்த புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் அந்த பைக்கின் எண் ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டு இருந்தது,
இளைஞர்களின் முகமும் துணியால் மூடப்பட்டு இருந்து. இந்த புகை ப்படங்களை எடுத்து விசாரணையைத் தொடங் கினார்கள்.
அந்த பைக்கின் சிவாஜி நகர், கோவண்டே பகுதியில் கடந்த சில நாட்களாகச் சுற்றி வந்ததைபோலீஸார் கண்டு பிடித்தனர்.
அதன்பின் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அந்த பைக்கின் உரிமையாளர் அஜய் சுனில் தோடே என்பதும்,
அவரின் நண்பர் அல்தாப் மிர்சா ஆகியோரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டு பிடித்தனர்.
இதை யடுத்து சிவாஜி நகரில் உள்ள அஜய் சுனில் வீட்டுக்கு நேற்று முன் தினம் சென்றனர்.
அப்போது வீடூ முழுவதும் அலங்கரிக்க ப்பட்டு, திருமணக் கோலத்தில் காட்சி அளித்தது.
வீட்டில் ஒருபுறம் இளைஞர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சியாக இருந்தனர்.
வீட்டுக்குள் போலீஸைப் பார்த்ததும் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் நின்றனர்.
அதன்பின் போலீஸார் அஜய் குறித்து விசாரித்த போது, அவர் மணக் கோலத்தில் மண மேடையில் அமர்ந்திருந்தார்.
செல்போன் திருட்டில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதில் ஈடுபட்டது அஜய் சுனில் என்பதை உறுதி செய்தனர்,
மேலும், விசாரணையில் செல்போனை விற்றுவிட்டதாகவும் சுனில் தெரிவித்தார்.
இதை யடுத்து, அங்கிருந்து கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
சுனில் மீது ஐபிசி 392,34 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.
அதன்பின் நீதி மன்றத்தின் அனுமதியுடன் நீதிமன்ற வளாகத்தில் அஜய் சுனிலுக்கும், மணப்பெண்ணு க்கும் திருமணம் நடந்தது.
இது குறித்து திலக்நகர் போலீஸ் நிலைய ஆய்வாளர் சத்யவான் பிலே கூறுகையில்,
“சுனிலும், அவரின் நண்பரும் இதற்கு முன் பல்வேறு செல்போன் பறிப்புகளில் ஈடுபட்டுள்ள தாகச் சந்தேகிக் கிறோம்.
சுனிலிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரின் நண்பர் தப்பி ஓடி விட்டார். அவரையும் தேடி வருகிறோம் “ என்று தெரிவித்தனர்.
Thanks for Your Comments