திரையுலகிலும் அரசியல் அரங்கிலும் தனக்கென தனியானதொரு பாதை அமைத்து வெற்றிக் கொடி நாட்டி, தான் வாழும் வரை முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த
எம்.ஜி.ஆர் மறைந்த தினம் இன்று... 31 ஆண்டுகளு க்கு முன் சோகம் தழுவிய பொழுதான, அன்றைய தினம் இப்படித்தான் புலர்ந்தது.
எம்.ஜி.ஆர் பெயரிலான மருத்துவப் பல்கலைக் கழகத்தை, சென்னையில் அன்றைய ஜனாதிபதி யாக இருந்த ஆர்.வெங்கட்ராமன் தொடங்கி வைக்க இருந்த நிலையில்,
அதற்கு முன்னர் எம்.ஜி.ஆரின் மறைவுச் செய்தி வந்ததால், அது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
1987-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி இரவு ராமாவரம் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்தில் உறங்கிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு, நள்ளிரவு 12.30 மணிக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மயக்கமடைந்த எம்.ஜி.ஆருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதயத் துடிப்பை சீராக்குவ தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட போதிலும் எதுவும் பலன் அளிக்காத நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் எம்.ஜி.ஆர் உயிர் பிரிந்தது.
இந்தச் செய்தியைக் கேட்ட ஜானகி அம்மாள், மயங்கிச் சரிந்தார்.
அப்போது, அ.தி.மு.க-வில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா வுக்கும் எம்.ஜி.ஆர் மரணம் பற்றிய தகவல் தெரிய வந்தது. உடனடியாக அவர் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றார்.
திரையுலகிலும் அரசியல் உலகிலும் எம்.ஜி.ஆருடன் இணைந்து பயணித்து, பின்னர் எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க-விடம் ஆட்சியை இழந்த தி.மு.க முன்னாள் தலைவர் மு.கருணாநிதி க்கும் எம்.ஜி.ஆரின் மறைவுச் செய்தி தெரிவிக்கப் பட்டது.
கோவையில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு ரயில் மூலம் சென்னை வந்த கருணாநிதி அதிகாலை 5.45 மணிக்கு ரயில் நிலையத்தில் இருந்து நேராக ராமாவரம் தோட்டத்து க்குச் சென்று,
40 ஆண்டுக் கால நண்பரான எம்.ஜி.ஆர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆர் உடல் ராஜாஜி மண்டபத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் பூத உடலைக் கண்டதும், லட்சக்கணக் கான மக்கள் கண்ணீர் விட்டுக் கதறினர்.
ஜானகி அம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் ராஜாஜி மண்டபத்துக்கு அவர் செல்ல மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.
முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணத்தைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருடைய தலைமையில் ராஜாஜி மண்டபத்திலேயே அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே எம்.ஜி.ஆர் உடலை அடக்கம் செய்ய, முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கின.
எம்.ஜி.ஆர் உடல் அருகே அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், ஜெயலலிதா ஆகியோர் கண்ணீருடன் அமர்ந்து இருந்தனர்.
நேரம் செல்லச் செல்ல கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம் பெருகிக் கொண்டே இருந்தது.
சுமார் நான்கு மைல் நீளத்துக்கு அஞ்சலி செலுத்துவ தற்காக மக்கள் திரண்டிருந்தனர்.
எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் அவரைத் தங்களின் கடவுளாகவே கொண்டாடி வந்தனர். அதன் வெளிப்பாடு, எம்.ஜி.ஆர் மறைவின்போது வெளிப்படையாகத் தெரிந்தது.
பொதுவாகக் கோயில்களுக்கு விரதம் இருப்பவர்கள் நெருங்கிய உறவினர்களின் துக்க நிகழ்வுகளில் கூட பங்கேற்காமல் தவிர்த்துவிடுவர்.
ஆனால், எம்.ஜி.ஆர் மறைவின்போது இந்த மரபை மாற்றினர் அவரின் தொண்டர்கள்.
எம்.ஜி.ஆர் மறைந்தது மார்கழி மாதம் என்பதால், இந்த சீஸனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற் காக மாலை அணிந்திருந்த லட்சக்கணக் கான பக்தர்கள்,
எம்.ஜி.ஆர் மறைவைக் கேட்டதும் மாலைகளைக் கழற்றி விட்டு எம்.ஜி.ஆரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னையை நோக்கி மக்கள் வந்தபடி இருந்தனர்.
எம்.ஜி.ஆரின் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் 40-க்கும் மேற்பட்டோர் தீக்குளித்தும் அதிர்ச்சியா லும் உயிரிழந்தனர்.
தாங்கள் நேசித்த தலைவனுக்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்ட இத்தகையத் தொண்டர் களை இன்றளவும் கொண்டிருக் கிறது அ.தி.மு.க.
அதனால்தான், இப்பூவுலகை விட்டு எம்.ஜி.ஆர் மறைந்தாலும் அவருடைய பெயரை மூலதனமாகக் கொண்டு ஓர் ஆட்சி தமிழகத்தில் இப்போதும் நடந்து வருகிறது.
எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து, இந்த நூற்றாண்டு முழுமைக்கும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும் என்றே தோன்றுகிறது.
Thanks for Your Comments