சிகிச்சை அளித்தவரைத் ஒன்றும் செய்யாமல் திரும்பிய காட்டு யானை - `திக் திக்’ கதை !

0
யானைகளோடு இயைந்த வாழ்க்கை வாழப் பெற்றவர்கள் உண்மை யில் பாக்கிய சாலிகள். மாவூத், காவடி, 


யானை டாக்டர்கள், யானை ஆராய்ச்சி யாளர்கள் என யானை குறித்த கதை சொல்பவர் களைப் பார்த்தால் அவ்வளவு லகுவாக இருக்கி றார்கள். 

முதுமலை, சாடிவயல், டாப்சிலிப் என யானைகள் இருக்கிற முகாம் களுக்குத் தேடிச் சென்று யானைகள் குறித்து சேகரித்தி ருக்கிறேன்.

யானையோடு தொடர்புடைய மாவூத், காவடி, யானை டாக்டர்கள், யானை ஆராய்ச்சி யாளர்கள் எனப் பல பேரைச் சந்தித்து பேசியிருக் கிறேன்.

நீலகிரி மாவட்டம், உதகை கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரிய ராக இருப்பவர் ராம கிருஷ்ணன்.

யானைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். யானை களோடு எப்போதும் நெருக்கமாக இருப்பவர்.

அவரை உதகை அரசு காலைக் கல்லூரியில் சந்தித்து அவர் சந்தித்த யானைகள் குறித்துப் பேசினேன்.

"யானை ஒரு பேரதிசயம், பேச்சுக்குச் சொல்ல வில்லை. அவற்றுடன் பல வருடங்க ளாகத் தொடர்பில் இருக்கிறேன் என்பதால் சொல்கிறேன்.

யானைகள் குறித்து முழுதாகத் தெரிந்த யாரும் அதைப் பேரதிசய மாகத்தான் பார்ப்பார்கள்.

என்னுடைய ஆரம்பகால ஆராய்ச்சி யானைகளின் உணவுகளில் இருந்துதான் ஆரம்பித்தது.

காட்டில் அவை எந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்கிறது.

ஆண் யானை களுக்கும் பெண் யானை களுக்கும் உணவில் இருக்கிற வேறு பாடுகள் என்ன என்று ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தேன்.


காட்டு க்குள் சென்றால் மட்டுமே அதுகுறித்த உண்மை நிலவரம் தெரிய வரும் என்பதால் சத்திய மங்கலம் காடுகளைத் தேர்ந்தெ டுத்தேன்.

1995-ம் வருடம் சத்திய மங்கலம் காட்டில் வீரப்பன் இருந்த கால கட்டம்.

தமிழ்நாடு கர்நாடகா என இரு மாநிலங்களும் சல்லடை போட்டு வீரப்பனை தேடித்திரிந்த காலம்.

அப்போது எனக்கு யானைகள் குறித்த ஆய்வுக் காக சத்திய மங்கலம் காட்டுக்குப் போக வேண்டிய சூழல்.

இப்போது இருப்பது போல பேன்ட் சர்ட் அணிந்து கொண்டு காட்டு க்குள் போய்விட முடியாது.

வீரப்பனுடைய ஆட்கள் அரசு அதிகாரி என நினைத்து தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.

அதனால் வெறும் லுங்கி, முண்டாஸ் அணிந்து கொண்டு ஆடு மாடு மேய்க்கும் உள்ளூர் ஆட்கள் போல காட்டுக்குள் யானை களைத் தேடிச் சென்றோம்.

அது ஒரு சவாலான பணியாகத் தான் இருந்தது. உணவு விஷயத்தில் வயதான

யானைகள் உண்ணுகிற சிலவற்றை இளவயது யானைகள் உண்ணாது.

உணவுக் காகவே யானைகள் தன்னுடைய வாழ் நாள்களை அதிகமாக கழிக்கிறது என்கிற விஷயம் அப்போது தான் தெரிய வந்தது.


செடி கொடிகள் என போகிற வழியெல்லாம் சாப்பிட்டுக் கொண்டே கடந்து போகும்.

ஒரு நொடி கூட அவற்றால் அமைதியாக இருக்க முடியாது, அசைந்து கொண்டே இருக்கும்.

யானை குறித்த பல ஆராய்ச்சி முடிவுகள் எனக்கு பல ஆச்சர்யங் களை கொடுத்தி ருக்கிறது.

2002 -ம் ஆண்டு என்னுடைய முனைவர் பட்டத்துக் காக நான் மேற்கொண்ட பயணம்

என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான பயணம். 2002 -லிருந்து 2007 வரை யானை களோடு

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலக் காடுகளில் 1,886 கிலோ மீட்டர்கள் நடந்து போயிருக் கிறேன்.

முதுமலை யிலிருந்து சின்காரா, முக்குருத்தி, வயநாடு வழியாக வாளையாரு வரை நடந்து ஆய்வு செய்திருக் கிறேன்.

என்னோடு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் வருவார். 

அவருக்குக் காடுகள் குறித்த எல்லா விஷயங் களும் தெரியும். காட்டில் ஆங்காங்கே வேட்டை தடுப்பு முகாம்கள் இருக்கும்.

இரவு நேரங்களில் அங்கே தங்கி விடுவோம். காலையில் மீண்டும் யானைகள் வலசை பாதையை பின் தொடர்ந்து செல்வோம்.

கையில் அரிசி பருப்பு போன்ற வற்றை எடுத்துச் சென்று பாதுகாப்பான இடங்களில் சமைத்துக் கொள்வோம்.

அநேக முறை பல ஆபத்து களில் இருந்து தப்பித்து வந்திருக் கிறோம்" என்கிறார்.

1999-ம் ஆண்டு யானைகள் குறித்த ஆராய்ச்சிக் காக சத்திய மங்கலம் வனப்பகுதி யில் கரடி மாதன் என்கிற ட்ரக்கரோடு இவர் சென்றிருக் கிறார்.

ஒரு நாளைக்கு 20 கிலோ மீட்டர்கள் வரை யானையைப் பின்தொடர்ந்து சென்றிருக் கிறார்கள்.


ஒரு நாள் எச்சரிக்கை யாகப் பயணித்தும் திடீரென ஒரு யானையை எதிர் கொண்டிருக் கிறார்கள்.

தப்பிச் செல்ல முடியாத அளவுக்குச் சூழ்நிலை அமைந் திருக்கிறது.

ராம கிருஷ்ண னுடன் பயணித்த மாதன் “சார் யானை நம்மல பாத்துருச்சு திரும்பி ஓடுங்க" எனக் கத்தி யிருக்கிறார்.

யானையைப் பார்த்து மாதன் கத்துகிறார். “க்ளோஸ் என்கவுண்டர்” என ராம கிருஷ்ணன் நினைத்தி ருக்கிறார்.

யானை எப்படியும் அடித்து விடும் என நினைத்து அப்படியே நின்றிருக்கிறார்.

மாதன் ராம கிருஷ்ணன் இருந்த இடத்தை நோக்கி கத்திய படியே ஓடி வந்திருக்கிறார்.

ஒரு சில நொடிகளில் யானை இருவரையும் தாக்காமல் விட்டு விட்டு விலகிச் சென்றிருக்கிறது.

ராம கிருஷ்ண னால் நடந்த சம்பவத்தை நம்ப முடிய வில்லை, தாக்கி விடும் என

நினைத்த யானை எப்படி விலகிச் சென்றது எனத் தெரியாமல் மாதனிடம் கேட்டிருக்கிறார்.

சில வருடங் களுக்கு முன்பு அந்த யானை தந்த வேட்டையின் போது துப்பாக்கி யால் சுடப்பட்டு தப்பி வந்திருக்கிறது.

உடலில் மூன்று குண்டுகள் வரை வாங்கி யிருந்த அந்த யானைக்கு சத்திய மங்கலம்

வனப்பகுதி யில் கால்நடை மருத்துவர் சிகிச்சை யளித்திருக் கிறார்.

அப்போது மாதனும் உடனிருந்து யானைக்கு உதவி யிருக்கிறார். அப்போது அதற்கு ஹரிணி எனப் பெயரிட்டிருக் கிறார்கள்.

மாதனுடைய வாசனை, அவருடைய குரல் போன்ற வற்றை அடையாளம் கண்ட ஹரிணி அவர்களை எதுவும் செய்யாமல் திரும்பி யிருக்கிறது.

"யானைகள் உணவு, தண்ணீருக் காக வருடத்துக்கு 600 சதுர கிலோ மீட்டர்கள் பயணம் செய்கின்றன.

அக்டோபர் நவம்பர் மாதங்களில் அவை தங்களின் இடம் பெயர்வு பயணத்தைத் தொடங்கி விடும்.

இந்த வருட டிசம்பர் மாதத்தில் பார்க்கிற யானையை அடுத்த வருட டிசம்பர் மாதத்தில் அதே இடத்தில் பார்க்க முடியும்.

யானைகளின் வலசைப் பாதையில் அவற்றை பின் தொடர்ந்து போயிருக் கிறேன்.

யானைகளைப் பொறுத்த வரை குடும்பமாக வாழ்கிற இயல்பை கொண்டவை. இடப் பெயர்வின் போது கூட்ட மாகவே செல்லும்.

கூட்டத்தில் இருக்கும் வயதான பெண் யானை கூட்டத்துக்கு தலைமை ஏற்று வழி நடத்தும்.

அதற்கு அதன் பாதைகள் நன்குத் தெரியும்.

அதற்கு `மென்டல் மேப்’ என்று சொல்வார்கள். காலங் காலமாக அவை அதைத் தான் பின் தொடர்கின்றன.


யானைகளுக்கு அதன் பாதையில் இருக்கிற காரிடர்கள் மிக முக்கியமான ஒன்று.

காரிடர்களை ஆக்கிரமி க்கும் போது யானைகள் தன்னுடைய வலசைப் பாதைகளில் குழப்பத்தைச் சந்திக்கின்றன.

இதனால் தான் யானைகள் குடியிருப்புப் பகுதிகளு க்குள் வருவதும், மனிதர்களைத் தாக்குவதும் நடக்கிறது.

யானைகளின் பாதைகளில் இருக்கிற மிகப் பெரிய கட்டடங்கள் யானைகளின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

முதுமலை யில் இருக்கிற பல கும்கி யானைகளைத் தன்னுடைய ஆராய்ச்சிக் காக

ராம கிருஷ்ணன் பின் தொடர்ந்து தகவல் களைத் திரட்டியி ருக்கிறார்.

காட்டு யானைகள் மட்டு மல்லாது கும்கியாக முகாம்களில் வளர்க்கப் படும்

யானை களும் குடும்பமாக வாழ்கிறவை தான். யானைகள் தாய்வழி வளரக்கூடிய சமூகம்.

முதுமலை யில் ரதி என்கிற பெண் யானை ஒன்று இருந்தது. 83 வயதில் இறந்து போனது.

ரதி பத்து குட்டிகள் பெற்று வளர்த்தி ருக்கிறது. அதில்லாமல் வேறு 15 குட்டிகளை வளர்ந்தி ருக்கிறது.

வீட்டில் பாட்டி எப்படி குழந்தைகளை வளர்ப்பார் களோ அதே போலத்தான் யானை களும் வளர்க்கும்.

இப்போது முதுமலை யில் இருக்கிற பொம்மன் என்கிற கும்கி யானையை ரதி தான் வளர்த்தது.

 காட்டில் அம்மாவை இழந்து நின்ற பொம்மனை, ரதி யானை முகாமுக்கு அழைத்து வந்தது.

ரஜினி நடித்த அன்னை ஓர் ஆலயம் திரைப் படத்தில் தாய் யானையாக ரதி நடித்தி ருக்கிறது.

இயற்கை பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. 

அதில் ஒன்று யானை. மனிதன் மிகப்பெரிய சுயநலவாதி. எப்படி யென்றால் மனிதனோடு இணைந்து போகிறது என்கிற 


காரணத்தால் சர்க்கஸில் யானையை வைத்து காசு பார்க்கும் அளவுக்கு மிகப் பெரிய சுய நலவாதி யாக மாறிப் போனான். 

அந்த சுயநலம் தான் யானையைப் பிச்சை எடுக்க வைத்தது, வித்தைக் காட்ட வைத்தது, மனிதனைப் பார்த்து கும்பிட வைத்தது. 

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், அவ்வளவு பெரிய உயிரினம் மனிதனைப் பார்த்து கும்பிடுவது எவ்வளவு பெரிய வன்முறை?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings