ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து
பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட் டுள்ளது.
இதன் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த 28 உறுப்பு
நாடுகள் அடங்கிய ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரிட்டனும் உள்ளது.
இதில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. இது தொடர்பாக மக்கள் கருத்தை அறிய கடந்த 2016ல் பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட்டது.
இதில், கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர்.
இதை யடுத்து, பிரிட்டன் பிரதமராக தெரசா மே பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனுடன் செய்துக் கொள்ள வேண்டிய எதிர்க்கால
திட்டங்கள் குறித்த செயல் திட்ட அறிக்கையை பிரதமர் தெரசா தயாரித்து வந்தார்.
இதன் மீது அதிருப்தி அடைந்த ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் 48 பேர்
பிரதமர் தெரசா மே மீது ஹவுஸ் ஆப் காமன் எனப்படும் கீழ்சபையில நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
இதன் மீது நேற்று மாலை ரகசிய வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.
இந்த வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி பெற மொத்த முள்ள 315 கன்சர்வேட்டிவ் எம்பிக்களில் 158 பேரின் ஆதரவு தேவை.
இந்த வாக்கெடுப்பு தெரசா மே வெற்றி பெற்றால் அவர் மீது அடுத்த ஒரு ஆண்டுக்கு நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.
இந்த நிலையில் அவரது கட்சி எம்பிக்கள் 147 பேர் தெரசாவுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
ஒரு வேளை தெரசா மே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி யடைந்தால் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப் படுவார்.
புதிய பிரதமராக வாய்ப்புள்ள நபர்கள் பட்டியலில் முன்னாள் வெளியுறவுத் துறை
அமைச்சர் போரிஸ் ஜான்சன், தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ெஜர்மி கன்ட்,
உள்துறை அமைச்சர் சஜித் ேஜவித் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன.
Thanks for Your Comments