வெளிநாட்டு சிறை போல வசதி கேட்கிறார் புழல் சிறை சீமராஜா !

0
வெளி நாட்டில் உள்ள சிறைகளை ஒப்பிடுகை யில் புழல் மத்திய சிறை குப்பை போல இருப்பதாக 
சிறைத்துறை டிஐஜி முருகேசன் வேதனை தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



வேட்டைக்கு செல்லும் மகாராஜா போல குதிரையில் வரும் இவர் தான் புழல் சிறையில் டிஐஜியாக பணியாற்றி வரும் முருகேசன்..!

வெளியில் இருந்து புழல் ஜெயிலுக்குள் கஞ்சா பொட்டலம் வீசப்படுவ தாக வந்த புகாரை தொடர்ந்து டிஐஜி முருகேசன் தினமும் காலை வேளைகளில் புழல் சிறையை குதிரையில் வலம் வருவது வழக்கம்..!

காலை வேளையில் முழுக்க முழுக்க குதிரையிலேயே புழல் ஜெயிலை சுற்றி ரோந்து வரும் அவரை அனைத்து வார்டன்களும் சல்யூட் அடித்து வரவேற்க வேண்டும் என்பது விதி..!

இவரது கண் அசைவின்றி புழல் சிறைக்குள் சிறு துரும்பு கூட நுழைய முடியாது என்பதை போல சிறையின் அனைத்து பகுதிகளையும் தனது கட்டுப் பாட்டுக்குள் வைத்துள்ளார் டிஐஜி முருகேசன்..!

இந்த நிலையில் தான் மாநில உளவுபிரிவு அதிகாரி ஒருவர் வெளியிட்ட சிறை வாசிகளின் புகை படத்தால் டிஐஜி முருகேசனுக்கு சிக்கல் ஏற்பட்டது. 

மத தலைவர்களின் கொலை சம்பவங்கள், கள்ள நோட்டு வழக்குகள் என பெரிய அளவில் குற்றங்கள் செய்து உயர் பாதுகாப்பு பிரிவு சிறையில் அடைக்கப் பட்டுள்ள 

கைதிகள் சிலர், டிவி, ஜூசர், வண்ண வண்ண உடைகள் என ஜெயிலில் சுக போகமாக வாழ்ந்து வருவது அந்த புகை படங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. 

சிறையின் சுவற்றை ஏதோ சொகுசு விடுதி அறை போல அடியோடு மாற்றி வைத்திருப்பதும் அம்பலமானது.
22 கலர்டிவி, ஜூசர், மிக்சி, மூட்டை மூட்டையாக பிரியாணி அரிசி, செல்போன்கள் என பல தடை செய்யப்பட்ட பொருட்களை அவசர அவசரமாக பறிமுதல் செய்தார் டிஐஜி முருகேசன்..! 

அங்கு பணிபுரிந்த தலைமை வார்டர்கள் உள்பட 17 பேர் பல்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப் பட்டனர்

இதன் தொடர்ச்சியாக டிஐஜி முருகேசனின் வீட்டில் தோட்ட வேலை, குதிரை வளர்ப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்த 4 தண்டனை கைதிகள் சுதந்திரமாக செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படு கின்றது.

குதிரை லாயத்தின் கூரைப் பகுதியில் இருந்து ஆப்பிள் ஐ போன் ஒன்றையும் , சிம்கார்டு களையும் கைப்பற்றிய டிஐஜி முருகேசன் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். 

இதையடுத்து கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அய்யப்பன் என்ற கைதியை கைது செய்த காவல் துறையினர் ஆப்பிள் ஐ போன் மற்றும் சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே தனது வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வெளியான தகவலை மறுத்துள்ள டிஐஜி முருகேசன், 



புழல் சிறையில் முதல் வகுப்பு மட்டுமல்ல அனைத்து அறைகளிலும் டிவிக்கள் வைத்து கொடுத்துள்ள தாகவும், 

வெளி நாட்டு சிறைகளை ஒப்பிடுகையில் நம்ம ஊர் சிறை குப்பை போன்று இருப்பதாகவும் ஆதங்கப் பட்டார்

சிறைக்கூடம் என்பது செய்த தவறை உணர்ந்து கைதிகள் திருந்தும் இடமாக இருப்பதற்கு பதிலாக சுகபோக வசதிகளை 

செய்து கொடுத்து அடுத்த குற்றவாளி களை உருவாக்கும் இடமாக மாற்றப் பட்டுள்ளது என்பதே கசப்பான உண்மை..!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings