கலாநிதியின் கணக்கற்ற தில்லு முல்லுகள் - சன்குழுமம் !

0
ஜெமினி தொலைக் காட்சியில் ரவிபிரசாத், மனோகர்பிரசாத் என்ற சகோதரர்கள் பங்கு தாரர்கள்.
இவர்கள் இருவரும் இந்தியன் வங்கியில் ரூ700கோடி கடன் பெற்று இன்று வரை வட்டி உட்பட கட்ட வில்லை.


இதை இந்தியன் வங்கி தமிழ் தினசரியில் விளம்பர மாகவே வெளியிட்டது. ஜெமினியில் கலாநிதி மாறனின் பங்கு 56.5 சதவி கிதமாகும்.

ஜெமினி நல்ல லாபகரமாகவே தொழில் செய்து பணம் ஈட்டுகிறது.

இன்று வரை பிரசாத் சகோதரர்கள் இதன் இயக்குநர் களாக தான் இருக்கிறார்கள்.

மாறன் சகோதரர்களின் அதிகார செல்வாக்கின் முன்பு சட்டம் தன் கைகளை கட்டிக் கொண்டு விட்டது.

இதே ஜெமினியில் மற்றொரு பங்குதாரராக சேர்ந்து பெரும் பணத்தை முதலீடு செய்து,
தயாநிதிக்கு தரப்பட்ட முக்கியத்துவங்கள் - சன்குழுமம் !
கடுமை யாகப் பாடுபட்டு சேனலை தூக்கி நிறுத்திய சரத் என்ற கலாநிதியின் நண்பர் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப் பட்டார்.

பங்குசந்தையில் சன் குழுமத்தை முக்கியப் படுத்துவதற் காக, உண்மைக்கு மாறான தகவல் களையும், கணக்கு களையும் கலாநிதி காண்பித் துள்ளார்.

இதன் மூலம் மத்திய அரசின் SEBI அமைப்பையும், மக்களையும் முட்டாளாக்கி சன் குழுமத்தின் சந்தை மதிப்பை பிரம்மாண்ட மாக உயர்த்திக் கொண்டார்.

1993ல் தொடங்கிய சன் குழுமத்தை 1985 -லிருந்து செயல்படுவது போல் அவரால் எப்படி தான் கணக்கு காட்ட முடிந்ததோ..... தெரிய வில்லை.

சன் குழுமத்தின் கேபிள் ஆபரேஷன் கணக்குகளில் இது வரை பாதிக்கும் 

குறைவான வாடிக்கை யாளர் கணக்கே வருமான வரித்துறைக்கு காட்டப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் பல கோடி வருமானவரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.

புதிதாக வரும் திரைப் படங்கள் சன் தொலைக் காட்சிக்கு தான் விற்க்கப்பட வேண்டும் என நிர்பந்திக் கிறார்கள்.

இந்த நிர்பந்தங் களுக்கு உடன் படாதா திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும்


சன் தொலைக் காட்சியின் 'டாப் 10 மூவிஸ்' திரை விமர்சனத்தில் கடைசி எண் தந்து கண்டபடி தாக்கி விடுகின்றனர்..!

போதாகுறைக்கு தினகரன், குங்குமம் இதழ்களும் குதறி தீர்த்து விடுகின்றன சம்மந்தப்பட்ட திரைப் படத்தை ! 

இந்த ஊடகப் பலத்தை கண்டு மிரலும் தயாரிப் பாளர்கள் சன் குழுமத்திடம் சரணாகதியாகி விடுகின்றனர்.
போட் கிளப்பில் 36 கிரவுண்ட் பரப்பளவில் கலாநிதி மாறனின் 25,000 சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட மான பங்களா உள்ளது. 

ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல் அமெரிக்கா மற்றும் லண்டனி லிருந்து தருவிக்கப் பட்ட பைபர் மற்றும் 

விலை உயர்ந்த மரப்பொருட் களைக் கொண்டு அழகூட்டப் பட்டு சொர்க்க புரியிலிரு க்கும் சொகுசு மாளிகைப் போல் வடிவமைக்கப் பட்டுள்ளது.


சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் வாடினாலும் இந்த பஙுகளாவில் உள்ள நீச்சல் குளத்தில் எப்போதும் நீர் நிறைந் திருக்கும்.

இந்த ஆடம்பர பங்களாவை விவரிக்க ஆரம்பிப்பது பக்கங்களை வீணாக்கி விடும் என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன்.

ஆனால் ஒரு காலத்தில் காமராஜர் வாழ்ந்த திருமலை பிள்ளை சாலை இல்லத்தை புகைப் படமெடுத்து,
வாரிசு போட்டி வந்தது எதனால்? - சன்குழுமம் !
'ஏழை பங்காளன் வாழும் பங்களா பார்த்தீர்களா....? என்று ஏளனம் செய்தவர்களின் நினைப்பு ஏனோ வந்து தொலைகிறது.

சுமார் 40,000 கோடிக்கு அதிபதியான கலாநிதி மாறன் தன் தந்தை முரசொலி மாறனின்

மருத்துவ செலவுக்காக மத்திய அரசு செலவிட்ட ரூபாய் 40 கோடியை இன்று வரை திருப்பிதர மனமில்லாத வராய் இருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings