தானியங்கி வாகனத்திற்கு உள்ளே தங்கும் விடுதி !

0
வருடம் முழுவதும் ஒரே வீடு, ஒரே தெரு, பக்கத்து வீட்டுக் காரரின் அதே இறுகிய முகம், ஒரே ஊர். சலித்துப் போய் விடாதா? 


இதற்குத் தீர்வு தான் என்ன? கார் போல் வீட்டிற்கும் சக்கரங்கள் இருந்தால் நமக்குப் பிடித்த இடத்திற்கு 

ஓட்டிச் சென்று விடலாம் என்று அடிக்கடி தோன்றும் அல்லவா? இந்தக் கற்பனை கனடாவில் நிஜமாகி யிருக்கிறது. 

மூன்று அறைகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட தானியங்கி வாகனத்தை Aprilli Design Studio என்னும் நிறுவனம் உருவாக்கி வருகிறது. 

பயணிக்கும், தங்கும் விடுதிக் காவே (The Autonomous Travel Suite) இந்தத் திட்டம் 

உருவாக்கப் பட்டதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் லீ (Steve Lee) தெரிவித் துள்ளார்.
இந்த வாகனத்தில் நீச்சல் குளம், விருந்தினர் அறை தேவைப்படு வோருக்கும் வசதி செய்து தரப்படும்!!



பயணிக்கும் விடுதி

சிறிய கட்டிலுடன் கூடிய தூங்கும் அறை, சமைய லறை, கழிப்பறை, குளியலறை, 

இவைபோக தனியாக ஒரு அறையும் இந்தக் காரில் உள்ளது. ஆறு முதல் பத்து மணிநேரம் பயணிக்கக் கூடிய 

இந்த வாகனம் சிறந்த வடிவமைப்புத் திட்டத்திற் கான Radical Innovation விருதைப் பெற்றி ருக்கிறது. 

வாகனம் மற்றும் தங்கும் விடுதியின் தேவைகள் எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்பதன் வடிவமே 

இந்தத் திட்டம். மேலும் திருமண மானோர், குடும்பம் என வாடிக்கை யாளர்களின் 

எண்ணிக் கையைப் பொறுத்து வாகனத்தின் கட்டணத் தில் மாற்றம் இருக்கும்.

பயணிகள் தங்களு க்குப் பிடித்த இடத்திற்கு இந்த வாகனத்தை எடுத்துச் செல்லலாம். 

விடுதி நிர்வாகத் திற்கு வாகனம் குறித்த தகவல்கள் (பயணி க்கும் திசை, வேகம், தூரம்) அனைத்தும் உடனுக்குடன் தெரிவிக்கப் பட்டு விடும். 

தானாகவே இயங்கும் இந்த வாகனத்தில் நீச்சல் குளம், விருந்தினர் அறை தேவைப்படு வோருக்கும் 


வசதி செய்து தரப்படும் என அந்நிறுவனம் அறிவித்தி ருப்பது பல பயணிகளை ஈர்த்துள்ளது. 

வரும் 2021 – ஆம் ஆண்டிற் குள் இக்கார் சேவை துவங்கப் படும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.

எப்படி இயங்கும் ?

முதலில் பேட்டரி மூலம் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் காராகத் தான் இது எதிர் பார்க்கப் பட்டது. 

ஆனால் தேவைகள் அதிகம் என்பதால் பேட்டரி களில் எளிதில் மின்னூட்டம் குறைந்து போய் விடும். 
அதனாலேயே ஹைட்ரஜன் எஞ்சினு க்குத் தகுந்தபடி வடிவமைப் புகளை மாற்றி யுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித் துள்ளது. 

இதில் சிக்கல் என்ன வென்றால் ஹைட்ரஜன் எஞ்சின்கள் இன்னும் வளராத 

குழந்தை களாகவே ஆய்வகத்தில் தவழ்ந்து கொண்டிருக் கின்றன. 



எப்படி அதனை வெற்றி கரமாக செயல்பட வைக்கப் போகிறார்கள் என்பதை அந்நிறுவனம் இன்னும் விளக்க வில்லை.

இல்லை யென்றால் Alternative Fuels எனப்படும் மாற்று எரி பொருட்கள் ஏராளம் உள்ளன. 

அவற்றின் அதாவது ஒன்றின் மூலம் இத்திட்ட மானது முடிக்கப் படும். 

உலகத்தின் பல கடற்கரை நகரங்களில் இந்த வாடகை பயணிக்கும் தங்கும் விடுதி 

விருந்தினர் களுக்காகக் காத்திருக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings