முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனி சாதனை !

0
பயன் பாட்டிற்கு வருகிறது சுற்றுச் சூழலலைப் பாதிக்காத ஹைட்ரஜன் ரயில் !


உலகளாவிய காற்று மாசு பாட்டில் ரயில் வண்டி களின் பங்கு கணிசமானது. 

டீசல் என்ஜின் களால் இயங்கும் ரயில்களின் எண்ணிக் கையைக் குறைக்க வளர்ந்த நாடுகள் முயற்சித்து வருகின்றன.

அந்த வகையில் ஜெர்மனி சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கி யிருக்கிறது.

மற்றைய ரயில்களைப் போல் கரிய மிலவாயு வெளியேற்றம் சிறிதளவும் இப்புதிய ஹைட்ரஜன் ரயிலில் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

வரும் 2021 – ஆம் ஆண்டு இந்த ரயில் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என ஜெர்மனி அரசு தெரிவித் துள்ளது.

காற்று மாசுபாடு

போக்கு வரத்துத் துறைகள் தான் காற்று மாசுபாட்டின் மூலக் காரணம். காற்று மாசு பாட்டில் 73 % புகை வாகனப் பயன் பாட்டினால் வருகிறது.

இதனைக் குறைக்கப் பல நாடுகளும் பல்வேறு திட்டங் களை அமல் படுத்தி வருகின்றன.

அதன் நீட்சியாக ஜெர்மனி சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் ரயில்களைத்

தயாரிக்க இருப்பதாக சில வருடங் களுக்கு முன் அறிவித் திருந்தது.

இதற்கென பிரான்ஸைச் சேர்ந்த அல்ஸ்டாம் (Alstom) நிறுவன த்துடன் ஜெர்மனி அரசு ஒப்பந்தம் போட்டது.

லித்தியம் மின்கலன் மூலம் இயங்கும் ரயிலைத் தயாரிக்கும் பணியை அந்நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

மணிக்குச் சராசரியாக 96 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயிலின் தயாரிப்புப் பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.

இந்நிலை யில் வடக்கு ஜெர்மனி யில் ஹைட்ரஜன் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடத்தப் பட்டது.

லித்தியம் மற்றும் ஹைட்ரஜன்

அலை பேசிகளில் இருக்கும் லித்தியம் மின் கலங்கள் போலவே இந்த ரயிலிலும் கொடுக்கப் பட்டுள்ளது.

மேலும், இந்த மின்கலனில் இருக்கும் ஹைட்ரஜன் மூலக்கூறு களுடன் ஏற்படும்


வேதி வினையின் காரண மாக மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது.

மின்சாரத் தின் மூலம் இந்த ரயில் அதிக பட்சமாக 497 மைல் வரை பயணிக் கலாம்.

வேதி வினையி னால் நீராவி மட்டுமே வெளியேற்றப் படுகிறது.

டீசல் ரயிலுடன் ஒப்பிடுகை யில் இந்த ஹைட்ரஜன் ரயிலின் விலை மிக அதிகம்.

ஆனாலும், டீசல் ரயிலை விட அதிக காலம் இதனைப் பயன் படுத்த முடியும்.
செயற்கை சூரியன் தயாரித்த சீனா !
மேலும், பராமரிப்புச் செலவு குறைவு தான் என்கிறார்கள் அதிகாரிகள். எதிர் காலத்தில்

இது போன்ற 14 ரயில் களைத் தயாரிக்க இருப்ப தாக ஜெர்மனி அரசு தெரிவித் திருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings