பாஜக மதவாத கட்சி யென்றால் வாங்கு வங்கிக்காக பேரம் பேசும் காங்கிரஸ் கட்சி
எத்தகையது என வினவி யிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்.
மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்கு வங்கிக்காக
முஸ்லிம் தலைவர் களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பேரம் பேசுவதாக வெளியான வீடியோவை
சுட்டிக் காட்டியுள்ள தமிழிசை சவுந்தர ராஜன் கடுமையான விமர்சனங் களை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பாஜக மதவாத கட்சி என்று தினமும் கூறும்
ஸ்டாலின் திருமா பசி கம்யூ. பார்வைக்கு... சிறுபாண்மை வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சி?" என வினவி யிருக்கிறார்.
முன்னதாக சமூக வலை தளங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்
முஸ்லிம் தலைவர் களுடன் பேசும் வீடியோ ஒன்று வெளியானது.
அதில், "90 சதவீத முஸ்லிம் களின் வாக்குகள் காங்கிரசுக்கே கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்து மாறும்
அவ்வாறு அவர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்கா விட்டால் பாஜக வெற்றி பெற்று விடும்,
காங்கிரஸ் கடுமையான இழப்பை சந்திக்க நேரும்" எனக் கூறுவது போல் காட்சிகள் இருந்தன.
வரும் 28 -ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில்
இந்த வீடியோ காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இந்நிலையில் தான், தமிழிசை காங்கிரஸை இப்படி கடுமை யாக விமர்சித் திருக்கிறார்.
Thanks for Your Comments