அமெரிக்கா வுக்குள் மெக்சிகோ எல்லை வழியாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு நுழைய முயன்ற போது கண்ணீர் புகை குண்டு வீசி தடுக்கப்பட்ட பெண்,
தனது குழந்தை களுடன் அமெரிக்கா வுக்குள் அனுமதிக் கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.
அமெரிக்க எல்லைக்குள் சட்ட விரோதமாகக் நுழைபவர் களை தடுத்து நிறுத்த அதிபர் டிரம்ப் உத்த ரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மரியா லிலா மெஸா கேஸ்ட்ரோ ((Maria Lila Meza Castro)) என்ற பெண் தமது 5 வயதாகும்
இரட்டைக் குழந்தை களுடன் அமெரிக்காவில் உள்ள தமது கணவரைச் சந்திக்க மெக்சிகோ எல்லை வழியாக நுழைந்த கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது.
இதில் குழந்தைகளுடன் மரியா உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடும் புகைப்படம் அந்நாட்டு சமூக வலை தளங்களில் கடந்த மாதம் வைரலானது.
இந்த நிலையில் அந்த பெண் தனது குழந்தை களுடன் அமெரிக்கா வில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Thanks for Your Comments