இறந்த H.W. புஷ்ஷின் வளர்ப்பு நாய், அவரது உடலுக்கு அருகில் சோகமாகப் படுத்திருக்கும் புகைப்படம், சமூக வலை தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் 42-வது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், கடந்த 1-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
முன்னதாக, H.W. புஷ், பார்கின்சன் நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் தன் மனைவி பார்பரா புஷ் இறந்த பிறகு,
அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. கடந்த சில மாதங்களில் மட்டும், இரண்டு முறை மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு வீடு திரும்பி யுள்ளார்.
H.W. புஷ்ஷின் இறுதிச் சடங்கு, வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதனால், அவரது உடல் இன்று எலிங்டன் ரிசர்வ் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.
இந்நிலையில், புஷ் வீட்டின் செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக் க்ராத் (Jim McGrath) தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி யான புகைப் படத்தை வெளியிட்டு, அதோடு ‘ பணி முடிந்தது’ என கேப்ஷனுடன் பதிவிட் டுள்ளார்.
அந்தப் புகைப் படத்தில் H.W. புஷ்ஷின் வளர்ப்பு நாய் ‘சுல்லி’ (Sully) இறந்த அவரது உடல் அருகில் மிகவும் சோக மாகப் படுத்திருந்தது.
இந்தப் புகைப்படம் உலக அளவில் அனைவரது மனத்திலும் இடம் பிடித்து, சமூக வலை தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 'சுல்லி' என்ற சேவை நாய், கடந்த ஜூன் மாதம் புஷ் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
இது, அமெரிக்கா வின் கால்நடை சேவை மையத்தில் பயிற்சி அளிக்கப் பட்டு கொண்டு வரப்பட் டுள்ளது. இந்த நாய் தன் வீட்டுக்கு வந்த போது, புஷ் இதை வரவேற்று ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டி ருந்தார்.
அதில், ‘ எங்கள் வீட்டுக்கு ஒரு புதிய நபர் வந்துள்ளார், மகிழ்ச்சி யாக உள்ளது. ‘சுல்லி’ மிகவும் அழகான பயிற்சி பெற்ற நாய். அமெரிக்கா வின் கால்நடை சேவை மையத்தி லிருந்து வந்துள்ளது” எனப் பதிவிட் டுள்ளார்.
H.W. புஷ் பார்பரா நோயால் பாதிக்கப் பட்டு, இருசக்கர நாற்காலி யில் சில காலம் தன் வாழ்வைக் கழித்து வந்தார். அவர் உயிருடன் இருக்கும் போது, சில்லி அவருக் காகக் கதவு திறப்பது, தேவையான
பொருள் களைக் கொண்டு வந்து தருவது போன்ற பல உதவிகளைச் செய்து வந்துள்ளது. குறைந்த காலமே புஷ்ஷுடன் பழகியிருந் தாலும், உரிமை யாளரை இந்த நாய்
அதிகம் நேசித்துள்ளது எனப் பலர் சமூக வலை தளங்களில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
Thanks for Your Comments