மர்மங்களை யும், கற்பனைக்கு எட்டாத அதிர்வு களையும் கொண்டது நமது பேரண்டம். விண்வெளி க்கு டூர் போகலாம் வாங்க என்று கூவி கூவி அலைக்கின் றனரே.
அங்கே போனால் என்ன வெல்லாம் அனுபவிப் பீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா..?
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று போய் விட முடியாது. விண்வெளி உடை என்பது உலகின் மிக விலை உயர்ந்த உடை ஆகும். அதன் விலை கிட்ட தட்ட 5 கோடி ரூபாய். அதன் எடை கிட்ட தட்ட 100 கிலோ அல்லது 200 கிலோ.
அந்த எடையை ஒருவன் அணிந்து கொண்டு பூமியில் அசைய கூட முடியாது ஆனால் நிலா போன்ற நம்மை விட ஈர்ப்பு விசை மிக குறைவாக இருக்கும் இடத்திலோ
அல்லது ஈர்ப்பு விசையை சுத்தமாக இல்லாத விண்வெளி போன்ற இடத்திலோ இந்த எடை அவனை எளிதாக இயங்க வைக்க இன்றி அமையாதது.
மேலும் அவனுக்கு ஆக்சிஜன் வழங்கும் தொட்டியும் இணைக்க பட்டிருப்பது அந்த உடையுடன் தான் என்பதால் அந்த உடை இல்லாமல் அவனால் சுவாசிக்க முடியாது.
சரி மைய கருவிற்கு வருவோம்,
விண்வெளி உடை இல்லாமல் உங்களை விண்வெளி யில் விட்டால் என்னவாகும்..? ஈரப்பதம் அல்லது நீர் பகுதி எது இருந்தாலும் அது ஆவி ஆக தொடங்கும் .கண் மற்றும்
நாக்கு வாய் போன்ற ஈர பதமுள்ள உடல் பாகங்கள் கொதிக்க தொடங்கும். இந்நேரத்து க்கு நுரையீரலில் காற்று இல்லாததால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன்
தடை செய்ய பட்டு விடும் என்பதால் வெறும் 15 வினாடிகளில் நாம் மயங்கி விட்டு இருப்போம்.
அப்புறம் உடலில் எங்கேயும் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் 90 வினாடியில் நாம் மரணத்தை தழுவி இருப்போம்.
அதன் பின் விண்வெளி என்பது ஒரு மிக குளிர் பிரதேசம் என்பதால் பிரிட்ஜ் இல் வைக்க பட்ட கறி துண்டுகளை போல கெட்டியாக நாம் உறைந்து போய் விடுவோம்.
அதன் பின் உடலுக்குள் இருக்கும் பாக்டிரியா அந்த உடலை சிதைக்க தொடங்கும். ஆனால் அதனாலும் முழுதாக சிதைக்க முடியாது என்பதால் அரை குறையாக சிதைந்த ..
குளிரில் கொடூரமாக விறைத்து போன. அந்த உடல் அப்படியே மிதந்து கொண்டு போக தொடங்கும். போகிற வழியில் ஏதேனும் நட்சத்திரம் எதிர் பட்டால் அதில் விழுந்து எரிந்து போகும்.
அப்படி எதுவும் எதிர் பட வில்லை என்றால் அந்த உடல் அப்படியே பல லட்ச கணக்கான
ஆண்டு களுக்கு எந்த மாறுதலும் இல்லாமல் ஊர்வலம் போய் கொண்டே இருக்கும்.
கற்பனைக்கு எட்டாத பல ஆபத்துகளை கொண்டது தான் விண்வெளி என்பதால் தான், அங்கே சென்று வருபவர் களை நாம் வீரர்கள் என்று அழைக்கி ன்றோம்.
Thanks for Your Comments