காதலுக்கு காதலன் குட்பை சொன்னதால் ஆத்திர மடைந்த காதலி, காதலன் வீட்டுக்குச் சென்று
அவரின் அம்மாவைத் தாக்கி விட்டு பணத்தைக் கொள்ளை யடித்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரின் மனைவி கோவிந்தம்மாள் (55).
இவர்களின் மகன் சக்திவேல். கடந்த 10-ம் தேதி கோவிந்தம்மாள் வீட்டில் தனியாக இருந்த போது ஆண், பெண் என இருவர் அங்கு வந்தனர்.
அவர்கள், தங்களை இன்ஜூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்று வதாகக் கோவிந்தம் மாளிடம் கூறி அறிமுகப் படுத்தியுள் ளனர்.
பிறகு சக்திவேலின் கார் குறித்து விவரங்களைக் கேட்டுள்ளனர்.
இந்தச் சமயத்தில் கோவிந்தம் மாளின் கை, காலை கயிற்றால் கட்டிய அவர்கள், சத்தம் போடாம லிருக்க வாயையும் பொத்தி யுள்ளனர்.
அதன் பிறகு, பீரோவை உடைத்து 4 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
அதன் பிறகு கோவிந்தம் மாளை மீட்டு அவரிடம் என்ன நடந்தது என்று குடும்பத்தினர் விசாரித்தனர்.
அப்போது அவர் முழு விவரத்தைக் கூறினார். இதை யடுத்து திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது.
கோவிந்தம்மாள் கூறிய தகவலின்படி போலீஸார், சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த
அருணகிரி, சரண்யா (29) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
போலீஸார் நடத்திய விசாரணை யில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சரண்யாவும் சக்திவேலும் கடந்த சில ஆண்டு களாகக் காதலித்து வந்துள்ளனர்.
அதன் பிறகு இவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சக்திவேல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த சரண்யா, காதலன் குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்டு
கோவிந்தம் மாளைக் கட்டிப் போட்டு பணத்தைக் கொள்ளை யடித்துள்ளார்" என்றனர்.
Thanks for Your Comments