5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு தெளிவான செய்தியை அளித்தி ருக்கும்.
அதாவது இவரது ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியைத் தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கிறது,
இது மாற்றத் துக்கான காலம் என்று ராகுல் காந்தி தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக செய்தி யாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:
நிச்சயமாக பிரதமர் மோடியினால் தன் வாக்குறுதி களைக் காப்பாற்ற முடிய வில்லை.
அவரைப் பிரதமராக மக்கள் தேர்வு செய்த போது வேலை வாய்ப்பு, ஊழல் ஆகிய அளவு கோல்களின் அடிப்படையில் தேர்வு செய்தனர்,
ஆனால் இப்போது மக்களுக்கு மயக்கம் கலைந்து விட்டது.
பிரதமரே ஊழலில் ஈடுபடுபவர் தான் என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர்,
இந்தத் தோல்விகள் அதன் பலனாக ஏற்பட்டது தான்.
நான் என் அம்மாவிடம் கூறினேன், 2014 தேர்தல்தான் எனக்கு சிறப்பானது என்றேன்.
அந்தத் தேர்தலி லிருந்து தான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். முக்கியமாக பணிவு, அடக்கம் என்பதை நான் கற்றுக் கொண்டேன்.
உள்ளபடியே கூற வேண்டு மெனில் நரேந்திர மோடியிட மிருந்து நிறைய பாடம் கற்றேன்.
அதாவது எதையெதை யெல்லாம் செய்யக் கூடாது என்பதை அவரிட மிருந்து கற்றுக் கொண்டேன்.
2014 முதல் பிரமாதமான பயணத்துக்கு அடி விழுந்துள்ளது, இது நல்ல விஷயம் தான், கெட்ட விஷயம் அல்ல.
நான் அவருக்கு எதிராக ஆட்சேபணைக் குரிய வார்த்தை களில் பிரச்சாரத்தில் பயன்படுத்த வில்லை.
நாட்டின் இளைஞர்கள் அவரை தேர்ந்தெடு த்துள்ளனர்.
நாட்டிம் பொருளாதார அமைப்பு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் இவரிடம் எதிர் பார்த்தனர்.
ஆனால் பிரதமர் முடங்கி விட்டார். எதிர்க் கட்சியினர் கொடுத்த நெருக்கடி க்கு அவரிடம் பதில் இல்லை.
மத்தியப் பிரதேசத்தி லும் ராஜஸ்தானி லும் முதல்வரைத் தேர்ந்தெ டுப்பதில் எந்த வித பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு கூறினார் ராகுல் காந்தி.
Thanks for Your Comments