சத்தீஷ்கார் முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் - இன்று மாலை பதவி ஏற்பு !

0
சத்தீஷ்காரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்த முள்ள 90 இடங்களில் 


68 தொகுதி களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது. 

இதன் மூலம் தொடர்ந்து 15 ஆண்டுக ளாக பா.ஜனதா வசம் இருந்த சத்தீஷ்காரில் 

தனிப் பெரும் பான்மை யுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அந்த கட்சி பெற்றது.

பின்னர் அங்கு முதல்-மந்திரி பதவிக்கு மூத்த தலைவர் களான பூபேஷ் பாகேல், சிங் தியோ, 

டாம்ரத்வாஜ் சாகு, சரண் தாஸ் மகத் ஆகிய 4 பேருக்கு இடையே போட்டி நிலவியது. 

இதனால் புதிய முதல் -மந்திரியை தேர்வு செய்வதில் கட்சித் தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டது.

எனவே இந்த 4 பேருடனும் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். 

சில நாட்களாக நீடித்த இழு பறிக்குப் பின் பூபேஷ் பாகேலை முதல்-மந்திரி யாக நியமிப்பது என முடிவு செய்யப் பட்டது. 

கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான இவர், டர்க் மாவட்டத்தின் படான் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.


முதல் -மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வான தகவல் சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் 

நேற்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. 

எனவே அவர்கள் அனைவரும், பூபேஷ் பாகேலை காங்கிரஸ் சட்ட மன்றக்குழு தலைவராக (முதல் -மந்திரி) ஒரு மனதாக தேர்வு செய்தனர். 

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வை யாளர் மல்லி கார்ஜுன கார்கேவும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்து க்குப் பின் செய்தி யாளர்களிடம் பேசிய கார்கே, ‘சத்தீஷ்காரில் 

முதல் -மந்திரி போட்டியில் இருந்த 4 பேரும் கட்சிக்காக சமமாக உழைத்து இருக்கின் றனர். 

எனவே பூபேஷ் பாகேலை தேர்வு செய்வது கடினமான முடிவு ஆகும். 15 ஆண்டு களுக்குப் பின் 

மாநிலத்தில் ஆட்சிக்கு வந்திருப்ப தால், எங்களுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக் கின்றன. 

நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதி களை நிறை வேற்றுவதில் பூபேஷ் பாகேல் 

சிறப்பாக செயல் படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று தெரிவித்தார்.


முதல் -மந்திரி யாக தேர்வு செய்யப் பட்டுள்ள பூபேஷ் பாகேல், இன்று (திங்கட் கிழமை) 

மாலை 5 மணிக்கு பதவி ஏற்றுக் கொள்வார் என அறிவிக்கப் பட்டு உள்ளது. 

அவருடன் வேறு மந்திரிகள் யாரும் இன்று பதவி ஏற்க மாட்டார்கள் எனவும் கூறப் படுகிறது.

பூபேஷ் பாகேல் தேர்வு மூலம் சத்தீஷ்கார் முதல் -மந்திரி தேர்வில் சில நாட்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings