தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு 45 மாதங்களில்
எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப் படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.
சகல மருத்துவ வசதிகளும் கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவ மனை
தமிழகத்தில் மதுரையில் அமைக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
இந்தியா முழுக்க புதிதாக மொத்தம் 14 இடங்களில் இந்த எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்பட உள்ளது.
இடம் தேர்வு
மதுரையில் இந்த இடம் தேர்வு செய்யப்படவே பல நாட்கள் ஆனது.
சென்னை, திருச்சி என்று பல இடங்கள் சோதனை செய்யப்பட்டு கடைசியில் மதுரையில் தோப்பூரில் இடம் உறுதி செய்யப் பட்டது.
பல தேர்வுகள், அலைக் கழிப்புகளை அடுத்து மதுரையில் உள்ள தோப்பூர் இதற்காக தேர்வு செய்யப் பட்டது.
அனுமதி
ஆனால் மத்திய அமைச்சரவை இதற்கு இன்னும் ஓப்பதல் அளிக்க வில்லை.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் வெளியானது.
மக்கள் விழிப்புணர்வு அறக்கட்ட ளையை சேர்ந்த ஹக்கிம் இந்த தகவலை பெற்று இருக்கிறார்.
வழக்கு
இதை யடுத்து மத்திய அரசுக்கு எதிராகவும், சுகாதாரத் துறைக்கு எதிராகவும் இதனால் பொது நல வழக்கு தொடுக்கப் பட்டது.
மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக பொது நல வழக்கு தொடுத்தார்.
அவர் தொடுத்த வழக்கில், சில நாட்களுக்கு முன், எய்ம்ஸ் மருத்துவ மனை எப்போது
மதுரையில் கட்டப்படும் என்று விளக்கம் கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது.
விளக்கம்
தற்போது அதற்கு மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் தமிழகத்தில் சோதனை செய்த
எய்ம்ஸ் கட்டுமான குழுவின் ஆய்வறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
இதை பார்த்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஒப்புதல் அல்ல வேண்டும்.
ஒப்புதல் அளித்த பிறகு எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும். இன்னும் 45 மாதங்களில்
எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது.
Thanks for Your Comments