பிரதமர் மோடிக்கு பாதுகாவலர் களை தேர்வு செய்வதில் ஜாதி பாகுபாடு கடை பிடிக்கப்பட்டு வருவதை டெல்லி ஹைகோர்ட் கண்டித்து இருக்கிறது.
உலகில் அதிக பாதுகா வலர்கள் கொண்ட பிரதமர்களில், இந்திய பிரதமர் மோடியும் ஒருவர். கருப்பு படை தொடங்கி, இசட் பிளஸ் பாதுகாப்பு என்று இவருக்கு தனி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதிய பாகுபாடு பார்க்கப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே பிரதமர் மோடிக்கு பாதுகாவலர் ஆக முடியும் என்று கூறப்பட் டுள்ளது.
எப்படி தெரிந்தது
கவுரவ் யாதவ் என்ற ஹரியானாவை சேர்ந்த நபர் கடந்த 2014 செப்டம்பர் மாதம், பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக விண்ணப்பம் செய்து இருந்தார்.
எல்லா விதமான தேர்வுகளிலும் வெற்றி பெற்ற இவர் நேர்முக தேர்விலும் வெற்றி பெற்றார். ஆனால் கடைசியில் இவர் தேர்வு செய்யப் படவில்லை.
என்ன விளக்கம்
இவருக்கு மத்திய அரசு அளித்த விளக்கத்தில், மூன்று ஜாதியினர் மட்டுமே பிரதமருக்கு பாதுகாவலர் ஆக முடியும்.
ஜாட், ராஜ்புட் , ஜாட் சீக்கியர்கள் ஆகிய மேல் ஜாதியினர் மட்டுமே மோடிக்கு பாதுகாவலர் ஆக முடியும். மற்ற ஜாதியினர் இதில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளது.
வழக்கு தொடுத்தார்
இந்த நிலையில் கவுரவ் யாதவ் டெல்லி ஹைகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தார். இது இந்திய அரசிய லமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
சட்ட பிரிவு 14,15,16 ஆகிய வற்றிற்கு எதிரான நடைமுறை இது. சாதி, இனம், மொழியையே வைத்து இவர்கள் பாகுபாடு காட்ட கூடாது என்று கூறி யுள்ளார்.
கேள்வி எழுப்பினர்
இந்த நிலையில் டெல்லி ஹைகோர்ட் தற்போது இது குறித்து மத்திய அரசை கண்டித்து இருக்கிறது.
அதே போல் பிரதமர் அலுவலகம், இந்திய ராணுவம், ராணுவ தேர்வாணையம், பாதுகாப்பு துறை ஆகிய அமைப்பு களுக்கு இதில் பதில் அளிக்க வேண்டும் என்றும் சம்மன் அனுப்பி உள்ளது.
Thanks for Your Comments