நான் திருடன் இல்லை - கொந்தளிக்கும் விஜய் மல்லயா !

0
எத்தனை பேருக்கு வாயில பீர் வார்த்த மனுஷன் ..அவருக்கு இப்படி யொரு 
நிலைமையா என்ற கே.எப். ஸ்ட்ராங் வாடிக்கை யாளர்கள் ஆதங்கப் பட்டிருக்க லாம்.. 

இதே மாதிரி தான், என்னை கலி தின்ன வைக்கிறதுல மோடிக்கும், ஜேட்லிக்கும் 


அவ்வளவு சந்தோசமா என்று கேட்கிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

வங்கியில மோசடி பண்ணதா சொன்ன முழுத் தொகையையும் தர்றேன், 

வாங்கிக் கிட்டு இந்தக் கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன், 

நீங்களும் வரக்கூடாதுனு கட்டத்துரை பாணியில் சொல்லியும் தொலைத்து விட்டார். 
இந்நிலையில் மீண்டும் கடனை நூறு சதவீதம் செலுத்தத் தயாராக இருப்பதாக வேண்டுகோள் விடுத் துள்ளார்..

தப்பிச் சென்ற மல்லையா

கிங் பிஷர் நிறுவனம், ஆல்ஹகாலிக் பிவரேஜ் நிறுவனங் களின் சொந்தக் காரரான 

விஜய் மல்லையா, பிரபல தொழிலதிப ராக கொடிகட்டிப் பறந்தவர். 

பொதுத்துறை வங்கிகளில் 9,000 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் லண்டனுக்கு தப்பிச் சென்றார். 

மோசடி மற்றும் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற குற்றச் சாட்டுக்க ளால் நாடு கடத்தக் 


கோரிய வழக்கை, லண்டன் நீதி மன்றத்தில் இன்றை க்கும் சந்தித்து வருகிறார்.

மறுப்பது ஏன்

சட்ட நடவடிக்கை களை கைவிடும்படி பல்வேறு கட்டங்களில் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த 

விஜய் மல்லையா, டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு இப்போது கேள்வி எழுப்பி யுள்ளார். 
நாடு கடத்தும் முடிவை நான் சட்டப்படி சந்தித்துக் கொள்கிறேன். 

மோசடி செய்யப் பட்டதாகக் கூறப்படும் பொது மக்களின் பணத்தை நூறு விழுக்காடு 

திரும்பத் தருவதாக அரசுக்கும், வங்கிகளு க்கும், ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தேன். 

ஆனால் திரும்பத் தரும் பணத்தை மறுப்பது ஏன் என்று வினவி யுள்ளார்.

ப்ளீஸ் டேக் இட்

மற்ன்றொரு டிவிட்டில் 3 தசாப்தங் களாக ஆல்ஹகால் பீவரேஜ் நடத்தி வந்துள்ளேன். 


இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாயை வழங்கி யுள்ளேன். கிங் பிஷர் நிறுவனமும் தனது சிறப்பான பங்பளிப்பை செலுத்தி யுள்ளது.

ஏர்லைன் நிறுவனம் மிகமோசமான இழப்பைச் சந்தித்தது. இருப்பினும் வங்கிகளு க்கு இழப்பு ஏற்படக்கூடா து. என்று நினைக்கிறேன். 

ஆகையால் தாம் வழங்கவுள்ள பணத்தை பெற்றுக் கொள்ளு ங்கள் என்று கூறியுள்ளார்.
போண்டியாக காரணம்

ஏடிஎப் விலை அதிகரித்த தால் நிதி நிலையில் மிகப்பெரிய போராட்ட த்தை சந்திக்க வேண்டி யிருந்தது. 

கச்சா எண்ணெய் பேரல் 140 டாலராக விலை உயர்ந்த போது ஏர்லைன் பிரச்சினையை எதிர் கொண்டது. 

இழப்பு கிடுமையானது தான் ஆனால் வ்ங்கி பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று விஜய் மல்லையா தெரிவித் துள்ளார்


தண்ணி காட்டும் மல்லையா

ஸ்காட்லாந்து யார்டுக்கே தண்ணி காட்டிக் கொண்டு நாடு கடத்த வேண்டும் என்று 

தொடரப் பட்ட வழக்கை சந்தித்துக் கொண்டிருக் கிறார் மல்லையா. 

ஏற்கனவே இரண்டு முறை பணத்தை திரும்ப செலுத்துவ தாக விடுத்த கோரிக்கையை வங்கிகள் ஏற்க மறுத்து விட்டன.
போஸ்டர் பாய் - கவுன்டர் அட்டாக்

அரசியல் வாதிகள் என்மீது பழி சுமத்துகிறார்கள். நான் திருடி விட்டு தப்பியோடி விட்டதாக மீடியாக்கள் எழுதுகின்றன.. 

கிங் பிஷர் நிறுவனத்துக்காக பெற்ற 9000 கோடி ரூபாயை வேண்டு மேன்றே 


எடுத்துச் சென்றதாக வங்கிகள் என்மீது முத்திரை குத்தியுள்ளன.

இது போஸ்டர் பாய் குற்றச் சாட்டில் கடந்த காலத்தில் மல்லையா எழுதியது
நினைவுக்கு வருகிறது.. பழி வாங்க இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ....

நான் திருடன் இல்லை


என்னை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கும் நான் கடனை திரும்ப செலுத்து வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது 
என என கேள்வி எழுப்பிருக் கிறார் விஜய் மல்லயா. என் பணத்தை எடுத்து கொள்ளுங்கள் என்பது தான் என் கருத்து. 

நான் பணத்தை திருடினேன் என்கிற விமர்சனத்தை நிறுத்த விரும்புகிறேன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings