"அழகர் சாமியை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. அதனால தான் இப்படி செஞ்சிட்டேன்" என்று போலீசில் தெரிவித் துள்ளார் இளம் பெண்!
ஒன்றரை வயசில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கலை மணிக்கு 19 வயதாகிறது.
ஈஸ்வரனு க்கு குடிப்பழக்கம் இருந்தி ருக்கிறது. இதனால் இருவருக் குள்ளும் நிறைய முறை சண்டை வந்திருக்கிறது.
போன மாதம் 8-ம் தேதி ஈஸ்வரன் திடீரென இறந்து விட்டார்.
இதனை அறிந்த ஈஸ்வரன் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து பிள்ளையை பறி கொடுத்த வேதனையில் கதறி அழுதார்கள்.
குழந்தை ஒப்படைப்பு
ஆனால் அவர்களுக்கு மேல் அழுதார் கலைமணி. "இப்படி குடிச்சி குடிச்சியே என்னையும்,
பிள்ளையும் தனியா விட்டுட்டு போய்ட்டாரே" என்று கூப்பாடு போட்டார்.
கலைமணி சொந்தக் காரர்கள் எல்லாரிடமும் சென்று இதையே சொல்லி சொல்லி அழுதார்.
பிறகு திடீரென ஒருநாள், தன் குழந்தையை எடுத்து கொண்டு போய் மாமனாரிடம் ஒப்படைத்தார்.
அதோடு வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 3 சவரன் நகை எல்லா த்தையும் எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார்.
அழகர்சாமி
குழந்தையை ஏன் ஒப்படைத் தார், நகை, பணத்தை எங்கே கொண்டு போனார் என அப்போது மாமனாருக்கு புரிய வில்லை.
அதோடு மருமகளும் மாயமாகி விட்டார். இதனால் மாமனாருக்கு சந்தேகம் வலுத்து கொண்டே இருந்தது.
பிறகு ஒரு நாள் அழகர்சாமி என்ற இளைஞருடன் கலைமணி ஜாலியாக
ஊர் சுற்றி கொண்டி ருப்பதை நேரடியாக பார்த்து விட்டார்.
ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த மாமனார், நேராக ராயப்பன் பட்டி போலீசுக்கு போய் விட்டார்.
உடலில் விஷம்
இப்படி ஜாலியாக மருமகள் ஊர் சுற்றி வருவதால், தன் மகனின் சாவில் மர்மம் இருப்ப தாகவும்,
அதனால் உடலை தோண்டி எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் சொன்னார்.
பிரேத பரிசோதனை யும் நடத்தப் பட்டது. உடலில் விஷம் கலந்திருப் பதாக மருத்துவ அறிக்கை வந்தது.
இதை யடுத்து கலைமணி யிடம் விசாரணையை ஆரம்பிக்கும் போதே எல்லா உண்மை யையும் பயத்தில் கொட்டி விட்டார்.
ரொம்ப பிடிக்கும்
"எனக்கு அழகர்சாமியை ரொம்ப பிடிச்சு போச்சு. அதனால் ரெண்டு பேருக்கும் கள்ள உறவு இருந்தது.
எவ்வளவோ ஜாக்கிரதை யாக நாங்கள் இருந்தும், என் புருஷன் இதை கண்டு பிடிச்சுட்டார்.
எப்பவுமே எங்கள் உறவுக்கு தொந்தர வாகவே இருந்தார். அதனால்
தான் அவர் சாப்பிடும் போது அந்த சாப்பாட்டில் விஷம் கலந்து தந்துட்டேன்" என்றார்.
இதை யடுத்து கலைமணி, அழகர்சாமி இருவரும் கைது செய்யப் பட்டனர்.
கள்ளக் காதலர்கள் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்கள்.
Thanks for Your Comments