ராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை காவலரான திருநங்கை ஒருவர், மேலதிகாரிகள் தொடர்ந்து
அவமானப் படுத்திய தாகக் கூறி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் வெளியிட்ட காணொளி வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நஸ்ரியா (22).
திருநங்கை யான இவர் மிகுந்த சிரமத்திற் கிடையேயும், புறக்கணி ப்பையும் மீறி தமிழகக் காவல் துறையில் கடந்த ஆண்டு இணைந்தார்.
அவருக்கு ராமநாதபுரம் ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணி கிடைத்தது.
இவர் ராம நாதபுரத்தின் முதல் திருநங்கை காவலர் ஆவார்.
மிகுந்த எதிர் பார்ப்புடனும், நம்பிக்கை யுடனும் பணிக்கு சேர்ந்த நஸ்ரியா வுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது.
தினம் தினம் அவர் அவமானத்தை சந்திக்க வேண்டி இருந்தது. சக காவலர்கள், மேலதிகாரி களால் அவமானம் அடைந்தார்.
திருநங்கை என்கிற ஒரே காரணத்தால் காவல் துறையில் உள்ள அதிகார மனோ பாவத்தை வைத்து நஸ்ரியாவை தினம் தினம் வதைக்க ஆரம்பித் துள்ளனர்.
ஆரம்பத்தில் எல்லாம் சரியாகி விடும் என அவர் நினைத்தார்.
ஆனால் போகப் போக அது அதிகரிக்கவே, தாங்க முடியாத மன உளைச்சலு க்கு ஆளானார்.
மேலதிகாரி களிடம் புகார் அளித்தும் யாரும் கண்டுக் கொள்ள வில்லை.
ஆயுதப்படை ஓஎஸ் டூட்டி சீனியர் எழுத்தர் பார்த்திபன், எஸ்.எஸ்.ஐ. ஜெயசீலன், ஆயுதப்படை ஆய்வாளர் முத்து ராமலிங்கம் ஆகியோர்
தனது ஒழுக்கம் பற்றியும், கண்ணியம் குறித்தும் மனம் நோகும்படி தொடர்ந்து விமர்சித்த தால் தான் மனமொடிந்து தற்கொலை செய்துக் கொள்வ தாக தெரிவித் துள்ளார்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நஸ்ரியா வாட்ஸ் அப்பில் காணொளி ஒன்றை வெளி யிட்டார்.
அதில், தனது தற்கொலைக்கு மேற்கண்ட மூவரும் தான் காரணம் என்றும் தனக்கு வாழப் பிடிக்க வில்லை என்றும்
கூறி எலி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொள்வதாக கூறும் அவர் எலி மருந்தை பாட்டிலில் உள்ள தண்ணீரில் கலக்கிறார்.
தனது தற்கொலைக்கு காரணமான மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் மருந்தைக் குடிக்கிறார்.
தற்கொலைக்கு முயன்ற நஸ்ரியா சக காவலர் களால் காப்பாற்றப் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறினார்.
காவல் துறையில் பெண்களுக்கு பாதுகாப் பில்லை என்று அவர் தெரிவித் துள்ளார்.
தற்போது நஸ்ரியா வெளியிட்ட காணொளி பெரும் வைரலாகி வருகிறது.
காவல் துறையில் அங்கொன்றும் இங்கொன்று மாக திருநங்கையர் பணியில் போராடி சேர்கின்றனர்.
ஆனால் அவர்களது நிலையைப் பார்த்து இரக்கப்பட்டு கைதூக்கி விட வேண்டிய காவலர்கள் ஆணாதிக்க,
செல்லரித்துப் போன மன நிலையுடன் அவர்களை அணுகுவது காவல் துறையில்
தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
Thanks for Your Comments