சபரிமலை கோயிலில் கடுமையாக உழைக்கும் கழுதைகள், தங்கள் வேலை முடிந்தவுடன் போராட்ட த்துக்குச் செல்வ தில்லை என
அம்மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் சுதாகரன் பேசியுள்ளது கேரளாவில் புது சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்
என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள பொது மக்கள், எதிர்க் கட்சிகள்,
சில அமைப்புகள் கோயிலை சுற்றிய பகுதிகளில் தொடர் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், ஐப்பசி பூஜைக்காகக் கடந்த மாதம் ஐந்து நாள்கள் சபரிமலை கோயில் நடை திறக்கப் பட்டிருந்தது.
அப்போது, சில பெண்கள் கோயிலு க்குள் செல்ல முயன்ற தால், நடை திறக்கப் பட்டிருந்த ஐந்து நாள்களும் சபரி மலையில் பதற்றம் நிலவியது.
தற்போது, கார்த்திகை மாத பூஜைக்காக சபரிமலை கோயில் மீண்டும் திறக்கப் பட்டுள்ளது.
போராட்டங்கள், அசம்பாவிதங் களைத் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
மற்றும் கெடுபிடிகள், மிகுந்த கட்டுப் பாடுகளை காவல் துறை விதித்து வருவதால்
பக்தர்களின் மத்தியில் தயக்க உணர்வு ஏற்பட்டு ள்ளதாகத் தெரிகிறது.
இதை யடுத்து, பக்தர்களின் சந்தேகங் களுக்கு விடை யளிக்கும் வகையில், பிரபலங்களைக் கொண்டு
விளம்பரங் களை வெளியிடுவது குறித்து தேவஸ்வம் போர்டு பரிசீலித்து வருவதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், அது குறித்து இன்று திங்கள் கிழமை இறுதி முடிவெடுக்கப் படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலை யில், நேற்று ஞாயிற்றுக் கிழமை ஆலப்புழாவில் நடைபெற்ற ஒரு கலாசார விழாவில் கலந்து கொண்டு பேசிய
அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் சுதாகரன், சபரிமலை கோயிலில் பல கழுதைகள் ஏராளமான பணிகளைச் செய்வதற்காக கடுமையாக உழைக் கின்றன.
அவை தங்கள் வேலை முடிந்ததும் ஒரு நாள் கூட போராட்டத் துக்குச் செல்வதில்லை.
மாறாக, பம்பை நதிக்கரையில் அமைதியாக ஓய்வெடுக் கின்றன.
அந்தக் கழுதை களுக்கு இருக்கும் கருணை கூட சபரிமலை கோயில் தந்திரிகளு க்கு இல்லை என சுதாகரன் பேசினார்.
அமைச்சரின் பொறுப்பற்ற தனமான பேச்சு, கேரள அரசியலில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கேரள அரசு துணை நிற்பதாக சபரிமலை கோயில் தந்திரிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில்,
தற்போது ஆளும் கட்சி அமைச்சர் தந்திரிகளை விமர்சித் துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மகரவிளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு
இரண்டு வாரங்களா கியும் கூட, வழக்கத்துக்கு மாறாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் இது போன்ற காலங்களில் நீண்ட வரிசைகளும், கூட்ட நெரிசல்களும் காணப்படும்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி சுமார் 2 மாதங்கள் ஆகும் நிலையில், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக,
ஐயப்பன் கோயிலுக்கு இது வரை, 50 வயதுக்கும் குறைவான வயது கொண்ட ஒரு பெண் கூட செல்ல முடிய வில்லை.
Thanks for Your Comments