தனது கணவர் தங்கத்தில் தாலி வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை !

0
சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், தனது காதல் கணவர் தங்கத்தில் தாலி வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அரியலூரை சேர்ந்தவர் ஆதவன். பொறியாளரான இவரும், ராமநாதபுரத்தை சேர்ந்த இளவரசி என்பவரும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர்.


அப்போது ஏற்பட்ட நட்பு காதலானது. இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, ஆறு மாதங்களுக்கு முன்பு மஞ்சள் கயிற்றை தாலியாக்கி இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர், தாம்பரம் அடுத்த சேலையூர் பாரதி நகரில் இருவரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

திருமணமான நாள் முதலே தனக்கு தங்கத்தில் தாலி வேண்டும் என்று இளவரசி தனது காதல் கணவனிடம் ஆசை ஆசையாய் கேட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

ஆசையை நிறைவேற்ற இயலாததால் ஒரு கட்டத்தில் கணவன் மனைவிக்கிடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த இளவரசி சம்பவத்தன்று, தனது கணவரிடம் தங்க சங்கிலி வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தனது மனைவியை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு, ஆதவன் அருகில் இருந்த வங்கிக்கு சென்று விட்டார்.

சிறுவயது முதலே ஆசைபட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்த்த பெற்றோரை விட்டு, காதலனே முக்கியம் என்று சென்ற இடத்தில்,

தனது காதல் கணவனின் சுடுசொல்லை தாங்காமல் மனஉளைச்சலில் இருந்த இளவரசி படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

தனது கர்ப்பிணி மனைவி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு வீடு திரும்பிய கணவன் ஆதவன் அதிர்ச்சி அடைந்தார்.

சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பிரேத பரிசோதனைக்காக இளவரசியின் சடலம் எடுத்து செல்லப்பட்டபோது ஆறுதல் கூறுவதற்கு கூட ஆள் இல்லாமல் மனைவியின் சடலம் கிடத்தப் பட்டிருந்த

ஸ்ட்ரெச்சரை பிடித்துக் கொண்டு கணவன் ஆதவன் கதறியது, அந்த ஒரு நிமிட கோபத்தால் வாழ்க்கையையே இழந்து தனி ஆளாக நிற்பதை அவருக்கு உணர்த்துவதாக இருந்தது.

இருந்தாலும் இளவரசியின் மரணம் குறித்து கணவர் ஆதவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இளவரசியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்களாகவே மனம் ஒத்து காதலால் இல்லற வாழக்கையில் இணைந்தவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லா விட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கிறது இந்த சோக சம்பவம்..!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings