விண்வெளி உடைகள் ஏன் மாறுவதில்லை?

0
நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் பதித்த காலத்தி லிருந்து விண்வெளி உடைகள் மிகப்பெரிய அளவில் மாறியது போலத் தெரிய வில்லையே என்ற சந்தேகம் எழலாம்.
விண்வெளி உடைகள் ஏன் மாறுவதில்லை?
உண்மையில் விண்வெளி உடைகள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்தாலும், கடந்த 50 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் மாறி யுள்ளன. 

ஆரம்பக் கால விண்வெளி உடைகள் என்பவை விமானிகள் உடையின் இறுக்கமான வடிவமாகவே இருந்தன.
விக்கித்துப் போன வீரர்

ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியநோவ், 1965-ல் வாஸ்கோட் 2 விண் கலத்தில் சென்று விண்வெளி யில் முதலில் நடந்த பெருமையைப் பெற்றவர். 

முதல் விண்வெளி நடையின் போது, அவர் மிகவும் திணறிப் போனார். 

உடையின் உள்ளே ஏற்பட்ட கடுமையான அழுத்தத் தால் அவருடைய விண்வெளி உடை 

ஊதிப் பெருக்க ஆரம்பித்த போது, அவரால் நகரக்கூட முடிய வில்லை. 
என்ன செய்வது என்று புரியாமல் விக்கித்துப் போனார் லியநோவ். விண்வெளி யில் ஏற்பட்ட கடுமையான அழுத்தமே இந்தப் பிரச்சினை க்குக் காரணம்.
அதற்குப் பிறகு அப்பல்லோ விண்கலத் திட்டங் களுக்கு உருவாக்கப்பட்ட ஏ7எல் விண் உடைகள் 

இந்தப் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு அழுத்தச் சம நிலையைப் பாதுகாக்கும் வகையில் விரிவடைவ தற்கான இணைப்பு களைக் கொண்டிருந்தன. 

அத்துடன் காற்றை மறு சுழற்சி செய்யும் அமைப்பும் உடை யிலேயே பொருத்தப் பட்டிருந்தது. உடைக்குள் 100 மில்லி குளிர்ந்த நீரும் சுழன்று கொண்டே இருக்கும்.

இனி உடலை மடக்கலாம்

ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் விண்வெளி உடை பிரத்யேக மாகவே தயாரிக் கப்படும். ஏனென்றால், ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் மாறுபடும் இல்லையா? 
அத்துடன் ஒவ்வொரு வருக்கும் பயிற்சிக்கு ஒன்று, விண்வெளி பயணத்தின் போது ஒன்று, மாற்று உடை என மூன்று விண்வெளி உடைகள் தயாரிக் கப்படும். 

விண்வெளி உடை ஒன்றின் சராசரி விலை, மூன்று கோடி ரூபாய். ஈர்ப்பு விசை இல்லாத 

விண்வெளி யில் பயன்படுத்த உருவாக் கப்பட்ட உடைகள் என்பதால், புவியில் அவற்றின் எடை மிக அதிக மாகவே இருக்கும்.
செவ்வாய் கிரகத்து க்குச் செல்வதற் காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தற்போது இசட் வரிசை உடைகளை உருவாக்கி வருகிறது. 

இந்த உடைகளின் இணைப்பு களில் டைட்டானியம் பால்பேரிங் உருளைகள் பொருத்தப் படுகின்றன. இவை அதிகபட்ச நெகிழ்வுத் தன்மையைத் தரக் கூடியவை. 

இதற்கு முந்தைய விண்வெளி உடைகளை அணியும் ஒருவர், தன் உடலை மடக்கிக் கால் கட்டை விரலைத் தொட முடியாது. 

முதன் முறையாக இந்த உடைகள் அதைச் சாத்தியப் படுத்தும் அளவு நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருக்கப் போகின்றன. 

அத்துடன் அழுத்த த்தைச் சமநிலைப் படுத்துவ தற்குத் தேவையான காற்று வெளியேற்றும் திறப்பும் இந்த உடையில் இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings