போர்ச்சுக்கல் நாட்டில் 76 வயதான இதய நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைக் காக பிரகங்கா நகரில் இருந்து
போர்ட்டோ நகர ஆஸ்பத்திரி க்கு நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப் பட்டார்.
அங்கு அவரை இறக்கிய பின்னர் அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட இடத்துக்கு
திரும்பிக் கொண்டிருந் தது.அந்த ஹெலிகாப்ட ரில் மொத்தம் 4 பேர் இருந்தனர்.
வரும் வழியில் திடீரென அந்த ஹெலிகாப்டர், ரேடார் திரையில் இருந்து மறைந்தது.
அதைத் தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இதில் அந்த ஹெலிகாப்டர் போர்ட்டோ நகர் அருகே செர்ரா டி பியாஸ் மலையில் விழுந்து நொறுங்கி கிடந்தது தெரிய வந்தது.
அந்த ஹெலிகாப்டரில் வந்த 2 விமானிகள், ஒரு டாக்டர், ஒரு மருத்துவ ஊழியர் என 4 பேரும் பலியாகி விட்டனர்.
இந்த விபத்து க்கு மோசமான வானிலை தான் காரணம் என முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
விபத்துக் குள்ளான ஹெலிகாப்டர் ‘அகஸ்ட்டா ஏ 109 எஸ்’ ரகத்தை சேர்ந்தது ஆகும்.
1997-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானம் இது வரை 16 ஆயிரத்து 370 நோயாளி களை
ஏற்றிச் சென்றுள்ள தாகவும், எந்த விபத்திலும் சிக்கியது இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Thanks for Your Comments