ரயில்வே ஊழியரை எம்பி உதயகுமார் தாக்கியதாக புகார் !

0
நிலக்கோட்டை அருகே ரயில்வே கேட்டை திறக்க மறுத்ததால் ஊழியர் மீது அதிமுக எம்பி உதயகுமார் தாக்கிய தாக புகார் எழுந்துள்ளது. 


இதனால் ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் ரயில்கள் நிறுத்தம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யில் இருந்து திண்டுக்கல் சென்ற அதிமுக எம்பி 

உதயகுமார், அழகம்பட்டி என்ற இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. 

அப்போது ரயில்வே கேட்டை திறக்க சொல்லி யுள்ளார். ஆனால் கேட் கீப்பர் திறக்காததால் 

ஆத்திர மடைந்த அதிமுக எம்பி உதயகுமார் கேட் கீப்பர் மணிமாறனை தாக்கியதாக கூறப் படுகிறது. 

இதனை யெடுத்து கேட் திறக்கப்பட்டு எம்பி உதயகுமார் சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து மணிமாறன் ரயில்வே ஊழியர்களை வரவழைத்து ரயில்வே கேட்டை மூடாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனால் மதுரை இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற பயணிகள் ரயில் பாதியில் நின்றது. 

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மணிமாறனிடம் பேச்சு வார்த்தை நடத்தி தற்போது ரயில்கள் தாமதமாக சென்றன. 

அதிமுக எம்பி கேட் கீப்பர் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.


இதனிடையே அதிமுக எம்பி உதயகுமார் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத் தில் ஒரு புகார் அளித்துள்ளார் 

அதில் கேட் கீப்பர் செல்போன் பயன்படுத்திக் கொண்டு கேட்டை மூடியதாக வும் 

இப்படி அலட்சியமாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு தன்னை கேட் கீப்பர் மணிமாறன் தாக்கியதில் 

நெஞ்சில் காயம் ஏற்பட்டதாக கூறி அதிமுக எம்பி உதயகுமார் கேட் கீப்பர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings