வேற்று கிரகவாசிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் தகவல் – டூடுல் வெளியிட்டது !

0
வேற்று கிரகவாசி களை தொடர்பு கொள்ளவும் அவர்களின் கிரக நிலைகளை ஆராயவும் 1974 – ஆம் ஆண்டு நவம்பர் 16 – ஆம் தேதி மனிதர்கள் பற்றிய தகவல் களை விண்வெளி க்கு அனுப்பியது. 
தென் அமெரிக்கா வின் கரீபியன் கடலில் Puerto Rico தீவு இருக்கிறது. இங்குள்ள அரிசிபோ வானிலை ஆய்வுக் கூடத்தில் இருந்து பால்வெளி அண்டத்திற்கு வெளியே உள்ள 

மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமான Messier 13 (M13) – விற்கு வேற்று கிரக வாசிகளை நோக்கி முதல் முறையாக செய்தி அனுப்பப் பட்டது. 

இது அரிசிபோ தகவல் எனப்படு கிறது. வெளியுலக வாசிகளைத் தொடர்பு கொள்ள மனிதர்க ளால் எடுக்கப்பட்ட இந்த முதல் முயற்சி எடுக்கப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் ஆகின்றது. 

இதனை கூகுள் தனது முகப்புத் திரையில் டூடுல் வெளி யிட்டுள்ளது.

அரேசிபோ தகவல்கள்
சூரியக் குடும்பத்தில் இருந்து 25,000 ஒளியாண் டுகள் தூரத்தில் அமைந்துள்ள Messier 13 (M13) நட்சத்திரக் கூட்டத்திற்கு 1,679 பைனரி டிஜிட்களில் 

தகவல் கட்டமைக் கப்பட்டு (சுமார் 210 பைட்) 2,380 MHz அதிர்வெண் வேகத்தில் அனுப்பப் பட்டது. 

அதில் இடம் பெற்றிருந்த ஏழு வகையான தகவல் களைக் கீழே காணலாம்.

1 முதல் 10 எண்கள் (பைனரியில்)

டி.என்.ஏ (DNA) மூலக்கூறை உருவாக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் இவற்றின் அணு எண்கள்.

குளுகோசின் வேதியியல் வாய்ப்பாடு

டி.என்.ஏ-வின் ஏணி போன்ற சுருள் வடிவம்

மனிதனின் உருவம் (ஆண்)

சூரிய மண்டலத்தின் உருவம்

அரேசிபோ சமிக்ஞையை அனுப்பிய தொலை நோக்கியின் படம்.
மூன்று நிமிட ரேடியோ அலைகளாகத் தயாரிக்கப்பட்ட இந்த தகவல்கள் பிராங்க் டிரேக் (Frank Drake) மற்றும் கார்ல் சேகன் (Carl Sagan) ஆகியோ ரால் தயாரிக்கப் பட்டன. 

எதிர் காலத்தில் நிச்சயம் இதன் மூலம் வெளிகிரக வாசிகளை கண்டு பிடிக்க முடியும் என ஆராய்ச்சி யாளர்கள் நம்பிக்கை தெரிவிக் கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings