`எங்க கண்ணு முன்னாடி தான் அந்த சின்னப் பொண்ணு மேலே லாரி ஏறி இறங்குச்சு.
ரொம்ப அநியாய மான சாவுங்க. நேத்துல இருந்து எங்களுக் கெல்லாம் மனசே சரியில்லைங்க...'' -
நேற்றைய தினம் கீழ்ப் பாக்கத்தில் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த பள்ளி மாணவியின் மரணத்தை
நேரில் பார்த்த அந்தப் பகுதி கடைக் காரர்களின் கண்ணீர் வார்த்தைகள் தான் மேலே இருப்பவை.
`கண்ணு மூடி தொறக்கிற நேரத்துல தண்ணி லாரியோட பின் சக்கரம் அந்தப் பொண்ணோட ஒரு பக்கத்து தலை மேலே ஏறி இறங்கிடுச்சு.
'அய்யோ, யாராவது வாங்களேன்... வாங்களேன்'னு ஒரே சத்தம்.
வேலை யெல்லாம் நிறுத்திட்டு நாங்க எல்லோரும் ஓடுனோம்க. பச்... புள்ளைப் போயிடுச்சுங்க.''
கீழ்ப்பாக்கம் பகுதியில் பள்ளிக் கூடங்கள் அதிகம். அதனால், காலை நேரங்கள்,
குறிப்பாக 7.45-ல் இருந்து தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அழைத்துச் செல்கிற
அப்பாக்கள், அம்மாக்கள், அங்கிள்கள், வேன் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என்று
சம்பவம் நடந்த அந்தச் சாலையில் சர் சர் என்று பறந்து கொண்டிருப் பார்கள்.
இதே சாலையில் கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்க் அலுவலகமும் இருப்பதால்,
தண்ணீர் லாரிகளும் குழந்தைகள் செல்லும் வண்டி களுக்கு இணையாக வேக வேகமாகச் சென்று கொண் டிருக்கும்.
இவை யெல்லாம் தினசரி நடவடிக்கை. இதை நேரடி யாகவே பார்த்திருக் கிறோம் என்பதால்,
என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள சம்பவம் நடந்த இடத்துக்கு நேரடியாகச் சென்றி ருந்தோம்.
பலரும் ``எங்களுக்கு ஒண்ணும் தெரியா துங்க. நாங்க பார்க்கவே இல்லை’’ என்று ஒதுங்கிக் கொள்ள, ஒரு கடைக்காரர் மட்டும் பேசினார்.
லாரி விபத்தில் உயிரிழந்த மாணவி``இங்க எங்க கண்ணு முன்னாடி தாங்க நடந்துச்சு. ரைட் சைடு பஸ் வருது.
லெஃப்ட் சைட் தண்ணி லாரி போகுது. ரெண்டு ஸ்கூல் பிள்ளைங் களோட ஒருத்தர் டூ வீலர்ல வந்தாரு.
அவசர அவசரமா, பஸ்ஸு க்கும் லாரிக்கும் நடுவுல இருந்த கேப்புல நுழைஞ்சு அந்தப் பக்கம் போகப் பார்த்தாரு.
பைக்கில் உட்கார்ந் திருந்த ஒரு ஸ்கூல் பொண்ணு ரோட்டுல விழுந்துடுச்சு.
அவ்வளவு தாங்க, கண்ணு மூடி தொறக்கிற நேரத்துல தண்ணி லாரியோட
பின் சக்கரம் அந்தப் பொண்ணோட ஒரு பக்கத்து தலை மேலே ஏறி இறங்கிடுச்சு.
'அய்யோ, யாராவது வாங்களேன்... வாங்களேன்'னு ஒரே சத்தம். வேலை யெல்லாம் நிறுத்திட்டு நாங்க எல்லோரும் ஓடுனோம்க.
பச்... புள்ளைப் போயிடுச்சுங்க. பின்னாடி வந்த வண்டிங்க எல்லாம் நின்னுப் போச்சுங்க.
அதுல செத்துப் போன பொண்ணோட ஸ்கூல் வண்டியும் நின்னுக் கிட்டிருந்த துங்க.
வழக்கமா அந்தப் பொண்ணு ஸ்கூல் வண்டியில தான் போவுங்களாம்.
நேத்தைக்குப் பார்த்து, அந்த ஸ்கூல் வண்டியை புது டிரைவர் ஓட்டிக்கிட்டு வந்திருக்காரு.
அவருக்கு சரியா வழி தெரியலையோ என்னவோ இந்தப் பொண்ணு வீட்டுக்குப் போக லேட் பண்ணிட்டாருப் போல.
அதுக்குள்ள இந்தப் பொண்ணு அவங்க சொந்தக் காரர் கூட பைக்குல ஸ்கூலுக்கு கிளம்பி வந்திருக்கு.
வர்ற வழியில் பைக்குல கூட்டிக் கிட்டு வந்த அந்தச் சொந்தக்காரர் இந்தப் பொண்ணுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தி ருக்காரு.
பாவம், அதைக்கூட சாப்பிடலைங்க அந்தப் பொண்ணு.
கையில சாக்லேட்டை பிடிச்சப் படியே லாரிக்கு அடியில் செத்துப் போய் கிடந்துச் சுங்க.
பார்த்தவங்க எல்லாம் அழுதுட்டோம்க'' என்றவர் மறுபடியும் கண் கலங்க ஆரம்பித்தார்.
''அந்தப் பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தவரு மட்டும் பஸ்ஸு க்கும் லாரிக்கும் நடுவுல நுழையாம இருந்திருந்தா,
ஒரு உயிரு போயிருக் காதுங்க. பாவம், அந்த லாரி டிரைவரைப் பிடிச்சு எல்லோரும் அடி வெளுத் துட்டாங்க'' என்றவர்,
கண்களைத் துடைத்தபடி தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.
காலை நேரப் பரபரப்பு, ஒரு 12 வயது சிறுமியின் உயிரைப் பறித்திருக் கிறது.
இதில் யாரைக் குற்றம் சொல்வது? பள்ளிக் குழந்தைகள் செல்கிற நேரத்தில் தண்ணீர் லாரி போன்ற கனரக வாகனங் களை ஓட்டு பவர்களையா?
அல்லது அதைக் கட்டுப் படுத்தாதவர் களையா? அல்லது
லேட்டாகக் கிளம்பிப் பரபரப்பாக பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அழைத்துச் செல்லும் பெற்றோர் களையா?
Thanks for Your Comments