அவர் என்ன நினைச்சாரோ தெரியவில்லை.. அப்படியே தட்டில் இருந்ததை கொடுத்திட்டு திரும்பி விட்டார் !
கஜா புயல் பாதிப்பை அடுத்து எல்லோருமே தங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறார்கள்.
நிறுவனங்கள் ரீதியாகவும், தனியார் அமைப்புகள் மூலமாகவும், இயக்கங்கள் வாயிலா கவும் என உதவிக்கரம் நீண்டு வருகிறது.
இதில் தனிந பர்களும் விதிவிலக் கல்ல. முடிந்தவர்கள் தங்கள் பகுதிகளில் பொருட்களை திரட்டி தருகி றார்கள்,
முடியாத வர்கள் நேரிலே போய் யாருக்கு என்ன உதவியோ செய்து வருகிறார்கள்.
நிவாரண பொருட்கள்
இப்படித் தான் சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் உள்ள பொது மக்கள் நிவாரண பொருட்களை திரட்டி கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் வியாபாரிகள், இன்னொரு பக்கம் தனியார் அமைப்புகள் என எல்லோருமே நிவாரண பொருளை
திரட்டும் பணியில் இருந்தார்கள். அப்போது அந்த வழியாக ஒரு பிச்சைக் காரர் வந்தார்.
தட்டுடன் வந்தார்
அவர் கையில் தட்டு எடுத்து கொண்டு அங்கிருந் தோரிடம் பிச்சை எடுக்க வந்தார்.
ஏற்கனவே அவரது தட்டில் கொஞ்சம் சில்லறையும், சில ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
நிவாரண பணிக்காக மக்கள் ஒவ்வொரு வராக துணி, பால், மருந்து, அரிசி, பணம் என தந்து கொண்டி ருந்தார்கள்.
ஒருவர் ஒரு பெரிய பையை வைத்து கொண்டு அந்த பொருட்களை வாங்கி வாங்கி அதனுள் போட்டு கொண்டிருந்தார்.
தடுத்து நிறுத்தினார்
இதை பார்த்த அந்த பிச்சைக்காரர் யாரிடமும் எதுவும் பேசவில்லை, தனக்கான பிச்சையை யும் வாய் திறந்து கேட்க வில்லை.
அந்த பை வைத்து கொண்டி ருந்த வரை தடுத்து நிறுத்தினார். பிச்சைக் காரர் தன்னை திடீரென நிறுத்தியதும், அவருக்கும் ஒன்றும் புரிய வில்லை.
அப்படியே கொட்டினார்
தனது தட்டில் இருந்த சில்லரை, ரூபாய் நோட்டு களை அப்படியே அந்த பையில் கொட்டினார்.
அதன் பிறகும் அங்கு அவர் நிற்கவில்லை, பிச்சையும் கேட்க வில்லை. வேக வேகமாக அங்கிருந்து நடந்து சென்று விட்டார்.
நிவாரண பொருட் களோடு வந்து நின்ற மக்கள் இதனை பார்த்து கண் கலங்கிய படியே நின்றார்கள்.
Thanks for Your Comments