பேட்டரி இல்லாமல் தானாக சக்தியூட்டி கொள்ளும் முதல் வீடியோ கேமரா வினை
இந்திய வம்சா வெளியை சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் உருவாக்கி யுள்ளனர்.
இந்த ப்ரோடோடைப் கேமராவினை உருவாக்க முதலில் வெளிச் சத்தினை
மின்சார மாக மாற்றும் பிக்சலினை ஆராய்ச்சி யாளர்கள் உருவாக்கி யுள்ளனர்.
டிஜிட்டல் இமேஜிங் புரட்சியின் நடுவில் நாம் இருக்கின்றோம், கடந்த ஆண்டு மட்டும்
உலகளவில் சுமார் 200 கோடி கேமராக்கள் விற்பனை செய்யப் பட்டுள்ள தாக இந்த ஆராய்ச்சியின் தலைவரான ஸ்ரீ கே நாயர் தெரிவித்தார்.
அணியக் கூடிய கருவிகள், சென்சார் நெட்வர்க் மற்றும் பல வித ஸ்மார்ட் கருவிகளில்
டிஜிட்டல் இமேஜிங் பயன் படுத்தப் படுவதோடு கூடுதலாக மின்சாரம் பயன் படுத்தாமல்
இயங்கும் கேமரா பல விதங்களில் பலருக்கும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கேமரா பயன் படுத்தாத நேரங்களில் ஸ்மார்ட்போன் மற்றும் வாட்ச் போன்ற
கருவிகளு க்கும் சார்ஜ் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments