வீட்டினுள் பாம்பு புகுந்ததால் முதல்வரை தொடர்பு கொண்ட வாலிபர் !

0
நள்ளிரவில் வீட்டினுள் பாம்பு நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் முதல்வருக்கு போன் செய்த சம்பவம் புதுச்சேரி யில் நடந்துள்ளது. 


பாம்பை பிடிப்பதற்காக வனத்துறை யினரை தொடர்பு கொண்ட போது அவர்கள் எடுக்காத தால் வாலிபர் முதல்வருக்கு போன் செய்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் மணவெளியை சேர்ந்தவர் ராஜா. 

இவர் பணி நிமித்தமாக நேற்றிரவு வெளியில் சென்றுள்ள நிலையில், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் உறங்கிக் கொண்டிருந்தனர். 

அப்போது வீட்டினுள் திடீரென பாம்பு ஒன்று வந்ததால் அதிர்ச்சி அடைந்த ராஜாவின் மகன் அக்கம் பக்கத்தினரை அழை த்துள்ளனர். 

நள்ளிரவு வேலை என்பதால் யாரும் உதவ முன் வராததால், அவர் அரசின் அவசர உதவி எண்ணை அழைத்துள்ளார்.


அப்போது அவர்கள் வனத்துறை யினரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர். 

அந்த இளைஞர் வனத்துறை யினருக்கு போன் செய்த போது அவர்கள் அழைப்பை ஏற்க வில்லை. 

இதனால் செய்வதறியாது தவித்த அந்த வாலிபர் அரசு டைரியில் உள்ள முதலமைச்சர் நாராயண சாமியின் எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.

போன் அழைத்ததும் நள்ளிரவில் எடுத்து பேசிய முதல்வர் நாராயண சாமி, வாலிபரிடம் பயப்பட வேண்டாம் என கூறியதுடன், 

சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். 

இதை யடுத்து, ராஜாவின் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் பாம்பை பிடித்தனர். 


பிடிபட்ட பாம்பு மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என அவர்கள் தெரிவித்தனர்.

விடிந்ததும் அந்த வாலிபரை தொடர்பு கொண்ட முதலமைச்சர் நாராயண சாமி தற்போதய நிலைமை குறித்து விசாரித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings