வட இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லா இந்தியாவின் முன்னணி சுற்றுலாத் தலமாக உள்ளது.
இங்கு தினந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் வசதிக் காக சிம்லா மாநகரட்சி யில் பொதுக் கழிப்பிடம் ஏராளமான வகையில் உள்ளது.
ஆனால், இந்த கழிப்பிடம் தூய்மையான வகையில் இருப்பதில்லை என்ற புகார் எழுந்த வண்ணம் இருந்தது.
இதனால் சிம்லா முனிசிபல் கார்பரேசன் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுத்தது.
இதன் முதற்கட்ட மாக டவுன் ஹால் அருகில் உள்ள ஒரு பொதுக் கழிப்பிடத்தில் ரேட்டிங் மெஷினை சோதனை அடிப்படை யில் வைத்தி ருக்கிறது.
இதில் மூன்று பட்டன்கள் இருக்கும். ஒன்று பச்சை, மற்றொன்று மஞ்சள், இன்னொன்று சிகப்பு.
இதை பயன் படுத்தும் பயனாளிகள் சுகாதாரம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றால் பச்சை பட்டனை அழுத்தலாம்.
மஞ்சளை அழுத்தினால் திருப்தி என்ற வகையிலும், சிகப்பை அழுத்தினால் மிகவும் மோசம் என்றும் எடுத்துக் கொள்ளப்படும்.
மற்ற கலரை விட சிகப்பு அதிகமாக அழுத்தப்படும் கழிப்பிடத்தை தூய்மைப் படுத்த
மாநகராட்சி துரித முறையில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாநகராட்சி கமிஷனர் பங்கஞ் ராய் கூறியுள்ளார்.
Thanks for Your Comments