தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தது யார் என்பது தொடர்பான ஆவணங்களை தமிழக போலீஸாரிட மிருந்து பெற்று விசாரணை நடத்தி வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
ஸ்டெர்லைட் ஆலைக்கெதி ரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது குறித்து சிபிஐ விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டது.
இதைத் தொடர்ந்து சிபிஐ வழக்குகள் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. EThanthi.com
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது பயன் படுத்தப்பட்ட 15 துப்பாக்கிகள் தொடர்பான ஆவணங்கள் பெறப்பட்டு,
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது பயன் படுத்தப்பட்ட 15 துப்பாக்கிகள் தொடர்பான ஆவணங்கள் பெறப்பட்டு,
தொடர்புடைய காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.
யாருடைய உத்தரவின் பேரில் 15 துப்பாக்கிகள் விநியோகிக்கப் பட்டன, கையெழுத்திட்டு அந்த துப்பாக்கிகளை பெற்றுக் கொண்டது யார்,
யாருடைய உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டது என்பது தொடர்பான ஆவணங்கள் தமிழக காவல் துறையிட மிருந்து பெறப்பட் டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Thanks for Your Comments