ரகசிய கேமரா சர்ச்சையில் சிக்கிய சஞ்சீவின் இன்னொரு முகம் அனைவரை யும் அதிர்ச்சி யடைய வைக்கிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கேமராக்களில் உள்ள வீடியோக் களைப் பார்த்த பிறகு, அங்கு தங்கியிருந்த பெண்கள் நிம்மதி யடைந்துள் ளனர்.
இது குறித்து போலீஸார் கூறுகை யில், ``திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ், கேரளாவைச் சேர்ந்த பெண்ணை காதலித்துத் திருமணம் செய்தவர்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
திருச்சியில் குடியிருந்த சமயத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந் துள்ளார்.
ஆதம் பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, முதலில் சஞ்சீவ் தங்கி யுள்ளார்.
அப்போது, அவரின் குழந்தை களுக்கு அந்தப் பகுதியில் உள்ள பிரபலமான பள்ளியில் இடம் கிடைக்க வில்லை.
அதனால், குரோம் பேட்டைக்கு குடியேறி யுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை காலி செய்யாமல், அதில் தன்னுடைய கட்டுமான நிறுவன அலுவலகத்தை நடத்தி யுள்ளார்.
அப்போது தான், அந்த இடத்தில் பெண்கள் விடுதியை நடத்தலாம் என அவர் முடிவு செய்துள்ளார்.
அது தொடர்பாக சமூக வலை தளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
இரண்டு நர்ஸ்கள், 3 பேராசிரியைகள், ஐ.டி நிறுவனங் களில் பணியாற்றும் 4 பேர் என 9 பேர் விடுதியில் தங்கி யுள்ளனர்.
அவர்களிட மிருந்து தலா 7,000 ரூபாயை வாடகையாக சஞ்சீவ் வசூலித் துள்ளார். இந்த விடுதியில் மூன்று கழிவறைகள், குளிய லறைகள் உள்ளன.
அது போல, மூன்று படுக்கை யறைகளும் உள்ளன. அங்குதான் பெண்கள் தங்கி யுள்ளனர்.
விடுதியில் சஞ்சீவ் பொருத்திய கேமராக்கள்
இந்தச் சமயத்தில், கடந்த 10 தினங்க ளுக்கு முன், விடுதியில் சீரமைப்புப் பணிகள் நடந்துள்ளன.
இதனால் அங்கிருந்த பெண்கள் வெளியில் தங்கி யுள்ளனர்.
இந்தச் சமயத்தில் தான் ரகசிய கேமராக்கள் 9 இடங்களில் பொருத்தப் பட்டுள்ளன.
கடந்த 2-ம் தேதி, புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், தன்னுடைய கூந்தலை காய வைக்க
ஹேர் ட்ரையர் பயன்படுத்த அறையி லிருந்த பிளக் பாயின்ட்டை பயன்படுத்த முயன் றுள்ளார்.
ஆனால், ஹேர் ட்ரையரின் பிளக் உள்ளே செல்ல வில்லை. இதனால், அவர் மீண்டும் முயற்சி செய்த போதும் முடிய வில்லை.
இதை யடுத்து அவர், பிளக் பாயின்ட்டை சோதித்த போது, உள்ளே ரகசிய கேமரா பொருத்தப் பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி யடைந்தார்.
உடனே, அங்கு தங்கியிருந்த பெண்களிடம் அவர் விவரத்தைக் கூறினார். அவர்கள் அனைவரும் அதிர்ச்சி யடைந்தனர்.
தொடர்ந்து, செல்போனில் உள்ள ரகசிய கேமராக் களைக் கண்டறியும் ஆப்ஸ் மூலம் விடுதி முழுவதும் ஆய்வு செய்தனர்.
அப்போது குளியலறை, மற்றுமுள்ள அறைகளில் பிளக் பாயின்ட் மற்றும் எல்இடி பல்புகளில் ரகசிய கேமராக்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
உடனடியாக அவர்கள் எங்களு க்குத் தகவல் தெரிவித்தனர். நாங்கள் சென்று விடுதி முழுவதும் ஆய்வு செய்து 9 ரகசிய கேமராக்கள்,
போலி அடையாள ஆவணங்கள், சஞ்சீவின் லேப்டாப், செல்போன்கள் ஆகிய வற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்.
அவரையும் கைது செய்து சிறையில் அடைத் துள்ளோம்" என்றனர்.
சஞ்சீவ் நடத்திய பெண்கள் விடுதி
போலீஸாரிடம் சஞ்சீவ் கொடுத்த வாக்கு மூலத்தில், `என்னுடைய கட்டுமான நிறுவனத்தில் பணி யாற்றும் பெண்களுடன் நெருங்கிப் பழகுவேன்.
விடுதியில் தங்கியுள்ள பெண்களை மிரட்டவே நான் கேமராக் களைப் பொருத்தினேன்.
ஆனால், கேமராவில் பதிவான வீடியோக் களை எடுப்பதற்கு முன் நான் சிக்கிக் கொண்டேன்' என்று கூறியுள்ளார்.
விடுதியி லிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கேமராக் களில், சில வீடியோக்கள் இருந்துள்ளன.
அதில், அங்கு தங்கியிருந்த பெண்கள் உடை மாற்றும் காட்சிகளும், கழிவறை க்குச்
செல்லும் காட்சிகளும் முகம் கழுவும் காட்சிகளும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனால், அங்கு தங்கியிருந்த பெண்கள் நிம்மதி யடைந்துள் ளனர்.
அதே நேரத்தில், சஞ்சீவின் லேப்டாப்பில் உள்ள வீடியோக்கள் போலீஸாரை அதிர்ச்சி யடைய வைத்துள்ளன.
அந்த வீடியோக்கள், சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப் பட்டவை. அதில், சஞ்சீவும் அவருடன் நெருக்கமாக இருக்கும் பெண்களும் உள்ளனர்.
அந்த வீடியோக்களில் உள்ள பெண்களில் சிலர், அவரின் கட்டுமான நிறுவன த்தில் பணியாற்றி யவர்கள் என்ற தகவல் போலீஸாரு க்குக் கிடைத்துள்ளது.
இதனால், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
சஞ்சீவ் பொருத்திய ரகசிய கேமரா
ரகசிய கேமராக் களைப் பொருத்த உதவியது யார் என்ற கேள்வியை சஞ்சீவிடம் போலீஸார் கேட்டதற்கு,
`நான் ஒரு இன்ஜினீயர். எனக்கு கேமராக்கள் குறித்த தொழில் நுட்பம் தெரியும். இதனால் எனக்கு யாரும் உதவி செய்ய வில்லை' என்று கூறியுள்ளார்.
சஞ்சீவ் மீது மோசடிப் புகார் உள்ள நிலையில், ரகசிய கேமராக் களைப் பொருத்திய புகாரும் சேர்ந்துள்ளது.
மோசடிப் புகாரில் சிறைக்குச் சென்ற அவர், மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
சஞ்சீவ் மீது பெங்களூரு வில் ஒரு வழக்கு இருப்பதாக சென்னை போலீஸாரு க்குத் தகவல் கிடைத்துள்ளது.
அது தொடர்பான விசாரணை யில் போலீஸார் களமிறங்கி யுள்ளனர்.
சிரித்த முகத்துடன் வலம் வந்த சஞ்சீவின் இன்னொரு முகம் குறித்த தகவல் அனைவரையும் அதிர வைக்கிறது.
எனவே, விடுதிகளில் தங்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித் துள்ளனர்.
Thanks for Your Comments