கட்சியில் இருந்து விலக்கினாலும் கவலையில்லை பெண் எம்எல்ஏ !

0
டெல்லி சட்டமன்றத்தில் நேற்று, ‘சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதால் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட 
பாரத ரத்னா விருதை திரும்ப பெறவேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சில மணி நேரங்களில் இது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து, 

அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் அல்கா லம்பா எம்எல்ஏ ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்துள்ளார். 

மேலும், அதற்கு தன்னால் ஆதவளிக்க முடியாது என தெரிவித்து ள்ளதாகவும், 

இதனால் கட்சி தலைமை அவரை ட்சியில் இருந்து விலகும்படி நெருக்கடி கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து, எம்எல்ஏ அல்கா லம்பா, ‘ ராஜிவ் காந்திக்கு எதிரான தீர்மானத்திற்கு என்னால் ஆதரவு அளிக்க முடியாது என தெரிவித்ததால் எனது கட்சியினர் என் மீது கோபம் கொண்டுள்ளனர். 

ராஜினாமா செய்யுமாறு எனக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கின்றனர்.

ராஜிவ் காந்தி நாட்டுக்காக பல தியாகங்களை செய்துள்ள நிலையில் என்னால் அவருக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரிக்க இயல வில்லை. 

நான் ராஜினாமா செய்யத் தயாராகவே இருக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings