சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
துறைமுகத்தின் ‘வார்பு’ பகுதியில் அழுகிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாரு க்குத் தகவல் கிடைத்தது.
இதனை யடுத்து அங்கு சென்ற போலீசாருக்கு பாறைகளின் இடையில் சிக்கியிருந்த உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
பின்னர் கிரேன் உதவியுடன் சுமார் 4 மணி நேரம் போராடி சடலத்தை மீட்ட போலீசார், அது யாருடைய சடலம், கொலையா, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments