அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை !

0
சென்னை யில் உள்ள பழம்பெரும் கட்டிடங் களில் சுந்தர் மஹால் என்று அழைக்கப் படும் 


பிரபலமான ஜெய்பூர் மாளிகை 100 கோடிக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது.

பிரபல பத்திரிக்கை சனிக்கிழமை செய்தி ஒன்றை வெளியிட்டது. 

அதில், சென்னையில் பழமையான ஜெய்பூர் மாளிகையை பாஷ்யம் கன்ஸ்டிரக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் சுமார் 100 கோடிக்கு விலைக்கு வாங்கி யுள்ளது.

சுந்தர் மஹால் விற்பனை

தனியார் பள்ளி அருகே இருக்கும் இந்த மாளிகையை பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவ தற்காக வாங்கியுள்ள தாகவும், 

இதற்கான தொகையை கோபால புரத்தில் வாழ்ந்து வரும் குடும்பத்தி னருக்கு கட்டிட நிறுவனம் கொடுத்துள்ள தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.

தற்போது சுந்தர் மகால் என்று பிரபலமாக அழைக்கப் பட்டு வரும் இந்த ஜெய்பூர் மாளிகையின் 

பூர்வீக சொந்தக் காரர்கள், ஆங்கிலேயர் களுக்கு சிவில் பணிகளை செய்து வந்தவர்கள். 

இவர்களின் குடும்பத்தினர் தான் தற்போது கோபால புரத்தில் வசித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த கட்டிடத்தில் அமிதிஸ்ட் என்ற பிரபல காஃபி ஷாப் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. 

2000 ஆண்டு தொடங்கப் பட்ட இந்த காஃபி ஷாப், பின் நாட்களில் ராயப் பேட்டை அருகே இடம் மாற்றம் செய்யப் பட்டது


இது குறித்து, வரலாறு ஆசிரியர் கொம்பை அன்வர் “இந்த செய்தி மிகவும் வருத்த மளிக்கிறது. 

பொது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பழம்பெரும் கட்டிடங்கள் குறித்து விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும். 

பணம் முக்கியம் தான் ஆனால் பாரம்பரிய அடையாளங் களை பாதிப்பது சரியல்ல.” என்று தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings