உலகின் கைவிடப்பட்ட, திகில் நிறைந்த இடங்கள் !

0
வரலாற்றின் முன் பக்கங்களில் இயங்கிக் கொண்டும், மனிதர் களுக்கு வசிப்பிட மாகவும் இருந்த பல இடங்கள் இன்று சூனிய மாய்க் கிடக்கின்றன.
அவற்றிற்குப் பின்னால் இருக்கும் மர்மக் கதைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. 

ரஷியாவின் அடர் காடுகளு க்கு நடுவே இருக்கும் வீடுகள், அமெரிக்கா வின் யாரும் இல்லாத தன்னந்தனித் தீவு, 
ஜெர்மனியில் இருக்கும் ராணுவ மருத்துவ மனை போன்ற கை விடப்பட்ட, மக்கள் செல்வதற்கு அச்சப்படும் 10 இடங்களைக் கீழே காணலாம்.

1 நீருக்குள் மூழ்கிப்போன நகரம்
சீனாவின் செஷங் மாகாணத்தில் 1959 ஆம் ஆண்டு நீர்மின் நிலையம் ஒன்று கட்டப் பட்டது. நீர்பிடிப்புப் பகுதிக்குள் இருந்த இந்த நகரத்தைக் காலி செய்து விட்டு மக்கள் வெளியேறு மாறு அரசின் சார்பில் உத்தரவிடப் பட்டது. 

நிலைய மானது பயன் பாட்டிற்கு வந்த பின்னர் ஒட்டு மொத்த நகரமும் நீருக்குள் மூழ்கிப் போனது. 
அவை நடந்து சுமார் 60 ஆண்டுகள் கடந்தும் இந்த இடம் அதே போல் இருக்கிறது. ஒரு சேதமும் இல்லாமல்.

2 கோல்மான் ஸ்கோப் நமிபியா (Kolmanskop, Namibia)
1900 களில் ஜெர்மானியர் களால் வைரங்கள் விளையும் பிரதேசமாகக் கொண்டாடப் பட்ட கோல்மான் ஸ்கோப் நகரம் பின்னாளில் பேய்களின் நகரமாக மாறி விட்டதாக அங்கிருந்த மக்கள் புலம்புகி றார்கள். 
பயத்தின் காரணமாக இங்கு வசித்துவந்த மக்கள் வெளியூர் களுக்கு புலம் பெயர்ந்து விட்டனர். ஆனால் வீடுகள் அதேபோல் இன்றும் இருக்கின்றன.

3 மவுன்செல் கடல் கோட்டை , இங்கிலாந்து (The Maunsell Sea Forts, Engalnd)
இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம். ஹிட்லரின் நாஜிப் படைகளின் கடல் மற்றும் வான்வெளித் தாக்குதல் களைச் சமாளிக்க இங்கிலாந்தால் இக்கோட்டை கட்டப்பட்டது. 
போர் ஓய்ந்த பின்னர் இந்த இடத்தை அரசு கைவிட்ட பின்னர், போரில் இறந்து போன ஆவிகள் அங்கு இருக்கின்றன என்ற கதை அங்கு குடிவந்தது.

4 ஹாலந்து தீவில் இருக்கும் வீடு, அமெரிக்கா ( Last House on Holland Island, USA)
அமெரிக்கா வின் செசாபீக் (Chesapeake) விரிகுடாவில் உள்ள ஹாலந்து தீவில் ஒரே ஒரு வீடு மட்டும் தனித்துக் கிடக்கிறது. 
இங்கு யார் வாழ்ந் தார்கள் என்பது பற்றிய குறிப்புகள் சரிவரக் கிடைக்க வில்லை. 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தவீடு கடுமையான சேதமடந்து விட்டது.

5 பிரிப்யாட், உக்ரேன் (Pripyat, Ukraine)
1986 ஆம் ஆண்டு இந்த நகரத்தில் ஏற்பட்ட பயங்கர அணுமின் நிலைய விபத்தினால் 15 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 
30 க்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். அந்த கோர சம்பவத் திற்குப் பிறகு அந்நகரம் கைவிடப் பட்டது. இன்றும் அங்கே பாழடைந்த கட்டிடங்கள் இருக்கின்றன.

6 பல்கேரியா வில் உள்ள கட்டிடம் (House of the Bulgarian Communist Party, Bulgaria)
பல்கேரியா வில் புகழ் பெற்றிருந்த கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலகக் கட்டிடம், 1990 களின் துவக்கத்தில் சோவியத் யூனியன் சிதறிய தற்குப் பின்னர் கைவிடப் பட்டது. 
அதன் பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை க்காக திறந்து வைக்கப் பட்டது. தற்போது ஆட்களின் வருகை குறைந்து விட்டதால் பார்க்கப் பயங்கர மாக காட்சி யளிக்கிறது.

7 ஓர்பியம் திரைய ரங்கம், அமெரிக்கா (The Orpheum Theater, Massachusetts, USA)
1912 முதல் 1959 வரை பயன்பாட்டில் இருந்த இந்த திரைய ரங்கம் பின்னர் புகையிலை சேமிப்புக் கிடங்காக உபயோகிக்கப் பட்டது. 
தற்போது உள்ளே ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
8 ரஷிய மர வீடுகள் (Abandoned Wooden Houses, Russia)
ரஷியா வின் கடும் பணி பிரதேசங்களில் உள்ள காடுகளில் இந்த வீடுகள் இருக்கின்றன. பனி மற்றும் அடர் காடுகளுக்கு உள்ளே இருக்கும் இந்த வீடுகளில் யாரும் வசிப்ப தில்லை. 
சாகச உணர்விற் காக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

9 ராணுவ மருத்துவ மனை, ஜெர்மனி (Abandoned Military Hospital, Beelitz, Germany)
1800 களுக்குப் பின்னர் கட்டப்பட்ட இந்த மருத்துவ மனை ராணுவ வீரர்களுக் காகக் கட்டப் பட்டது. 

இன்று மருத்துவ மனையின் பகுதிகள் மனிதர்கள் நுழைய முடியாத அளவிற்கு சேதமடைந் துள்ளன.

10 ஹாஷிமா தீவு (Hashima Island, Japan)
கடலுக்கு அடியில் இருந்த நிலக்கரிச் சுரங்கத்தி னால் புகழ் பெற்றிருந்த இந்த தீவில் ஏராளமான மக்கள் வசித்து வந்தார்கள். 
நிலக்கரிக்குப் பதிலாக பெட்ரோலைப் பயன்படுத்த அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததன் விளைவாக மக்கள் தொகை யானது குறைந்து விட்டது. தற்போதைய நிலையில் இந்தத் தீவில் யாருமே வசிக்க வில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings