‘சமூக வலை தளத்தில் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் என்னை பாகிஸ்தான் சிறையில் தள்ளியது.
இதற்காக பாகிஸ்தான் அதிகாரி களை கூட நான் குறை சொல்ல விரும்ப வில்லை.
எனக்கு ஏற்பட்ட நிலைக்கு நான் தான் காரணம்’ என பாக் சிறையில் இருந்து விடுதலை யான இந்தியர் அன்சாரி கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஹமித் நிஹல் அன்சாரி (33).
இவர் சமூக வலை தளத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி உள்ளார்.
அவரைப் பார்க்கும் ஆவலில் கடந்த 2012-ம் ஆண்டு ஆப்கா னிஸ்தான் வழியாக பாகிஸ்தா னுக்குள் நுழைந்த தாகக் கூறப் படுகிறது.
அப்போது அவர் ராணுவத்தி னரால் கைது செய்யப் பட்டார்.
அவர் மீது பாகிஸ்தா னின் போலி அடையாள அட்டை வைத்திருந் ததாகவும் உளவு பார்த்த தாகவும் குற்றம் சாட்டப் பட்டது.
ஏறக்குறைய 3 ஆண்டுகள் விசாரணைக் கைதி யாக இருந்த அன்சாரி க்கு,
2015 டிசம்பர் 15-ம் தேதி ராணுவ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதை யடுத்து, அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
அன்சாரி யின் சிறை தண்டனை கடந்த 15-ம் தேதி யுடன் முடிந்தது.
பாகிஸ்தான் சிறையில் மொத்தம் 6 ஆண்டுகள் இருந்த அன்சாரி இரு தினங்க ளுக்கு முன்பு சிறையி லிருந்து விடுவிக்கப் பட்டார்.
பின்னர் அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரி களிடம் ஒப்படைத் தனர்.
இதையும் படிங்க..
இந்த நிலையில் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அன்சாரி பேட்டியளித் துள்ளார்.
அதில் அவர் கூறி யுள்ளதாவது
‘‘எந்த தவறும் செய்யாமல் பாகிஸ்தா னில் நான் சிறையில் அடைக்கப் பட்டேன்.
அதற்கு நான் யாரையும் குறை சொல்ல விரும்ப வில்லை. எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்க ளுக்கு முழு பொறுப்பும் நானே.
சமூக வலைதளம் மூலமாக ஏற்பட்ட தொடர்பால் பெண்ணின் அழகில் மயங்கி, பாகிஸ்தானு க்கு சென்றதே காரணம்.
சிறையில் அடைக்கப் பட்ட பிறகு தான் நான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டேன் என்பது தெரிய வந்தது.
ஆனால் தவற்றை உணர்ந்து நான் திருந்தி அழுதாலும் அதனை கேட்க பாகிஸ்தான் அதிகாரிகள் தயாரில்லை.
எனக்காக போராடிய இந்திய அதிகாரிகள், உறவினர்கள், தாய்க்கு நன்றி சொல்லு கிறேன்.
நான் செய்த தவறும், எனக்காக குரல் கொடுத்த வர்களின் உண்மை யான அன்பை புரிந்து கொள்ள முடிந்தது’’ எனக் கூறினார்.
Thanks for Your Comments