இந்தியா வில் கணவனை இழந்த இளம் விதவை பெண் மர்ம நபரால் ரூ.95,000 ரூபாய் ஏமாந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
உத்தரபிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்தவர் அனிதா தேவி (28).
இவரின் கணவர் சில வருடங் களுக்கு முன்னர் இறந்த நிலையில் தனது இரண்டு குழந்தை களுடன் வசித்து வந்தார்.
இந்நிலை யில் இரு தினங்களுக்கு முன்னர் அனிதாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன் பெயர் ஷகீல் அகமது என கூறி யுள்ளார்.
பேடி-எம் மாலில் அனிதா வாங்கிய பொருளுக்கு அதிர்ஷ்ட பரிசாக ரூ 16 லட்சம் விழுந்துள்ள தாக கூறியுள்ளார்.
இதற்கேற்றார் போல் அனிதா கடந்த வாரம் பேடி-எம் மால் மூலம் பொருள் வாங்கிய தால் இதை உண்மை என நம்பினார்.
இதை யடுத்து அனிதாவின் வங்கி கணக்கு எண்ணை அனுப்ப சொன்ன அகமது, டோக்கன் தொகை யாக குறிப்பிட்ட தொகையை செலுத்த சொல்லி யுள்ளார்.
இதை யெல்லாம் நம்பிய அனிதா அகமதின் வங்கி எண்ணை வாங்கி கொண்டு அதில் ரூ.95,400-ஐ உறவினர் களிடம் கடன் வாங்கி செலுத்தி யுள்ளார்.
அதற்கு பிறகே தான் ஏமாற்றப் பட்டதை அனிதா உணர்ந்தார். இதை யடுத்து அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவில், கணவர் இல்லாமல் தனியாக வாழும் என்னை மர்ம நபர் ஏமாற்றியதாக குறிப்பிட் டுள்ளார்.
இதை யடுத்து சைபர் கிரைம் பொலிசார் உதவியுடன் பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Thanks for Your Comments